2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விசேட அமர்வில் மாயமான உறுப்பினர்கள்

எம். றொசாந்த்   / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவில் திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவது தொடர்பிலான விசேட அமர்வில் தேநீர் இடைவேளையின் பின்னர் பல உறுப்பினர்கள் மாயமாகி இருந்தனர்.

முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விசேட அமர்வு இன்று (05) வடமாகாண சபையில் நடைபெற்றது. 

சபையில் உறுப்பினர்கள் பலரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை எதிர்த்து கருத்து தெரிவித்தனர்.

சபை ஆரம்பத்தில் வடமாகாண முதலமைச்சர் காணி அபகரிப்பு மற்றும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் தொடர்பில் உரையாற்றினார். அதன் பின்னர் பல உறுப்பினர்கள் அவைத்தலைவரிடம் எழுத்து மூலம் அனுமதி கோரி உரையாற்றினர்கள்.

பின்னர் மதியம் 11.30 மணியளவில் தேநீர் இடைவேளைக்கு சபையை ஒத்திவைத்து மீள ஆரம்பிக்கும் போது, முதலமைச்சர் உள்ளிட்ட 17 உறுப்பினர்கள் மாயமாகி இருந்தனர்.

தொடர்ந்து சபையில் ஏனைய உறுப்பினர்கள் உரையாற்றும் போது, உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மாயமாக தொடங்கினார்கள். இறுதியில் சபை 2 மணியளவில் ஒத்திவைக்கப்படும் போது, சபையில் 15 உறுப்பினர்கள் மாத்திரமே இருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .