2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விழிப்புடன் மக்கள் செயற்படவேண்டும்

A.K.M. Ramzy   / 2021 ஏப்ரல் 20 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில்    இன்று செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே சண்முகநாதன் சிறிபவானந்தராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்  “வட மாகாணத்தைப் பொறுத்தவரை கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. அதேபோல, யாழ் போதனா வைத்தியசாலையில் இரண்டு நாட்களாக  இரண்டு மரணங்கள் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டிருக்கின்றது. அதில்   77 வயதும் மற்றவர்   59 வயதான ஒருவரும் மரணமாகியுள்ளனர். அவர்கள் சில காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்து யாழ் போதனா வைத்தியசாலையின் விசேட பிரிவில் தகுந்த கண்காணிப்பு கூடி இருந்தவர்கள்  கொரோனா தொற்று காரணமாக  மரணமாகியுள்ளனர்.

எனவே இது தொடர்பில் மக்களின் விழிப்புணர்வு மிக அத்தியாவசியமாக காணப்படுகின்றது. அந்த வகையில் நமது வைத்தியசாலையில் பல முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை செய்திருக்கின்றோம்.  சத்திர சிகிச்சை பெறுபவர்களுக்கு சத்திரசிகிச்சை கூடத்திற்று செல்வோர் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை செய்த பின்புதான் அவர்களை சத்திர சிகிச்சைக்கான அனுமதிக்கின்றோம்.

அதேபோல விபத்து பிரிவில் வருபவர்கள் உடனடியாக சத்திரசிகிச்சை செய்ய வேண்டி இருப்பின் அவர்களுக்கு பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே சிகிச்சைக்காக அனு மதிக்கின்றோம்.

மேலும் இன்னும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது வைத்தியசாலை ஒரு முக்கியமான இடம் இவ்வாறான இடத்தில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கின்றது எனவே வைத்தியசாலை நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்குபொதுமக்களின் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .