2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’வேலைவாய்ப்பில்லாத பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்’

Editorial   / 2020 ஜூலை 28 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், டி.விஜித்தா, எம்.றொசாந்த்

வடக்கில் உள்ள இளைஞர் - யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென, பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் வண பிதா எஸ்.சந்திரகுமாரிடம் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை, ​வலியுறுத்தினார்.

பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் வண பிதா எஸ்.சந்திரகுமார், யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று, ஆயர் இல்லத்தில், இன்று (28) காலை நடைபெற்றது.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் பொதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், மதங்களுக்கிடையே ஒற்றுமையை வளர்க்க வேண்டுமெனவும்  வடக்கில்  மக்கள் படுகின்ற கஷ்டம் துன்பங்களை  பிரதமருக்கு தெரியப்படுத்துமாறும் கூறியுள்ளேனென்றார்.

“வடக்கில்  உள்ள முக்கியமான பிரச்சினையாக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அத்தோடு, கல்வி  தொடர்பான விடயங்களிலும் முன்னேற்றம் ஏற்படுத்த வேண்டும்.  மீன்பிடி  விவசாயத்தில் கவனம் செலுத்தி முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கொண்டுள்ளேன்” எனவும், ஆயர் கூறினார்.

இதையடுத்து, ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த பிரதமரின் இணைப்புச் செயலாளர்,  யாழ். மறைமாவட்ட ஆயர் பிரதமரிடம் தெரியப்படுத்துமாறு தன்னிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளாரென்றார்.

அனைத்து விடயங்களையும் தான் பிரதமரை சந்திக்கும் போது அவருக்கு எடுத்துரைப்பேன் எனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .