2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வைத்தியர் தாக்கப்பட்டமைக்கு வடக்கு சுகாதாரப் பணிமனை கண்டனம்

Editorial   / 2020 மார்ச் 19 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்ட ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பரா.நந்தகுமார் தாக்கப்பட்டமையை, வடக்கு மாகாணச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கண்டித்துள்ளார்.

இது குறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கையில் ​மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸ் தொடர்பாக திங்கட்கிழமை (16), விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பரா.நந்தகுமார், யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் த.சிவரூபன் ஆகியோர் றியோ ஐஸ்கிறீம் பணியாளர்களால் தாக்கப்பட்டனர். இது பல தரப்பினர் மத்தியிலும் பெரும் அதிருப்தியை தோற்றுவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் இன்று நிலவி வருகின்ற அசாதாரண சூழ்நிலையில் கூட அர்ப்பணிப்புடனும் கடமையுணர்வுடனும் பணியாற்றும் சுகாதாரத் துறை உத்தியோகத்தர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் அனுசரணையாக செயற்பட வேண்டிய நிலையில் இவ்வாறு நடந்தது மனம் வருந்தத்தக்கதெனவும், அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான அடாவடிகள் எமது இயங்கு திறனைக் குறைத்து நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பலவீனமாக்கலாமெனத் தெரிவித்துள்ள அவர், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பொலிஸ் திணைக்களத்தைக் கோரியுள்ளதுடன், நெருக்கமாக அவதானித்தும் வருவதாகவும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .