2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

43 வருட காலத்துக்கு பின்னர் தடைப்பட்ட தொழுகை

Editorial   / 2019 ஏப்ரல் 26 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்

புத்தளம் நகரின் சில பள்ளிவாசல்களிலும் புறநகர்களிலும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நடைபெறவில்லை.

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நடைபெறாதென, புத்தளம் பெரியபள்ளி நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்பிரகாரம் புத்தளம் நகரில் பெரியபள்ளி, பகாபள்ளி, நாகூர் பள்ளி,ஹுதா பள்ளி  என்பவற்றிலும் புறநகர் பகுதிகளான தில்லையடி ஜும்ஆ பள்ளி, அனுராதபுர வீதியில் முல்லைநகர் ஜும்ஆ பள்ளி என்பவற்றிலும் ஜும்ஆ நடைபெறாது என ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது.

புத்தளம் பெரியபள்ளி நிர்வாகம் ஜூம்ஆவை நடத்துவதில்லை என தீர்மானம் எடுத்ததையடுத்து, வேறு பள்ளிவாசல்களும் பெரியபள்ளியுடன் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தி இம்முடிவுக்கு வந்தன.

வெள்ளிக்கிழமை ளுஹர் நேரத்துக்கு முன்னர் பொது மக்கள்  புத்தளம் பெரிய பள்ளிக்குள் பிரவேசிப்பது முற்றாக்கத் தடை செய்யப்பட்டிருப்பதாக பெரியபள்ளியின் நிர்வாகக் குழு செயலாளர் ஜே.இஸட்.எம்.நாஸிக் தெரிவித்திருந்தார்.

இதனால் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துவதாகவும் அனைவரினதும் நன்மை கருதி பொதுமக்கள் இம்முடிவுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டிருந்தார்.

புத்தளம் நகரில் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகை ஒன்று, 1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சேகுவரா குழப்பத்தின் போது, அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட 48 மணி நேர ஊரடங்கு சட்டத்தின் போதும், 1976ஆம் ஆண்டு புத்தளம் பெரிய பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி பிரயோகத்த்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட தருவாயிலும்  இவ்வாறு ஜும்ஆ தொழுகை தடைப்பட்டிருந்ததாக புத்தளம் நகரின் மூத்த பிரஜைகளான சூழலியலாளர் எஸ்.எம். முபாரக் மற்றும் புத்தளம் பெரிய பள்ளி தலைவர் பீ.எம். அப்துல் ஜனாப் ஆகியோர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .