2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அருவக்காடுக்கு பாதுகாப்புடன் கழிவுகளை கொண்டுசெல்ல ஏற்பாடு

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அருவக்காடு கழிவு முகாமைத்துவப் பிரிவுக்கு,  கொழும்பிலிருந்து கழிவுகளை கொண்டுசெல்லும்  வாகனங்களுக்கு பொலிஸ், இராணுவப் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 இதற்கமைய, இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள்  55 பேரைக் கொண்ட குழுவொன்றை அமைத்துள்ளதாக, புத்தளத்துக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி சந்திரசேன ஜயகொடி தெரிவித்தார்.

கழிவுகளை கொண்டுசெல்கையில் ஏற்படும் இடர்களை தவிர்க்கும் வகையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது எவரேனும் தாக்குதல் நடத்தினால், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின்பேரில் அவர்களை கைதுசெய்து விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை   எடுக்கப்பட்டுள்ள​தாக தெரிவித்தார்.

கொழும்பில் கேரிக்கப்படும்   கழிவுகளை கொட்டுவதற்கான இடம் இன்மையால் அவை அறுவக்காடு கழிவு முகாமைத்துவ நிலையத்துக்கு கொண்டுவரப்படுவதாகவும், இதனை அரசியல் இலாபம்  கருதி ​சிலர் தடுக்கும் முயற்சிகளில்  ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கழிவுகளை ஏற்றிச்சென்ற லொறிகள் மீது  அண்மையில் கல்வீச்சுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்ட நால்வர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .