2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அளுத்வத்தை மீனவக் கிராம இறங்கு துறையின் கூரை வீழ்ந்தது

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூன் 26 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சால், சிலாபம், அளுத்வத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டடிருந்த கடற்றொழில் இறங்குதுறையின் கூரை, அப்பிரதேசத்தில் திடீரென வீசிய காற்றினால் கழற்றி வீசப்பட்டு, அருகிலிருந்த வீதியில் வீழ்ந்துள்ளதாக, சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவிலேயே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிலாபம், அளுத்வத்தை கார்மேல் மாதா கடற்றொழில் சங்கத்தின் வேண்டுகோளின் பேரில், கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு? அளுத்வத்தை ஏரிக் கரையில் சிறியளவிலான மூன்று கடற்றொழில் இறங்கு துறைகள் நிர்மாணிக்கப்பட்டிருந்ததோடு, அவை கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 30ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு திறந்துவைக்கப்பட்ட ஒரு இறங்கு துறையின் கூரையே, நேற்று அதிகாலை வீசிய காற்றினால் கழற்றி வீசப்பட்டுள்ளது.

இதனால் அருகிலிருந்த வீட்டுக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதோடு, தொலைபேசி கம்பம் மற்றும் மின்கம்பமும் உடைந்த வீழ்ந்துள்ளதால் அப்பிரதேசத்தில் மின்சாரமும் தொலைபேசி சேவையும் துண்டிக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .