2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொரோனாவை ஒழிக்க நிதி ஒதுக்கீடு

Editorial   / 2020 மார்ச் 28 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் நகர சபை இவ்வருட  அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட வரவு செலவு திட்ட  நிதியிலிருந்து அரைவாசியை, கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் உலர் உணவு பங்கீடுகளுக்கும் ஒதுக்கியுள்ளது.

புத்தளம் நகர சபையின் விசேட கூட்டம் புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் தலைமையில் நேற்று  (27) சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே. மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டது. நகர சபையின் பணிகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையில், நகர சபை உத்தியோகத்தர்களின் சேவை விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புத்தளம் நகரில் அண்மையில் இந்தோனேசியாவுக்குச்    சென்று வந்த ஒருவருக்கு கொரோனா தோற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, வைத்திய பரிசோதனைகளுக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான  நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக, ஏனைய அரச திணைக்களங்களோடும், இடர் முகாமைத்துவ திணைக்களத்துடனும் இணைந்து புத்தளம் நகர சபை செயற்படுவதற்கும் தீர்மானித்துள்ளது.

அத்துடன், வெளியிலிருந்து வர்த்தக நடவடிக்கைகளுக்காக புத்தளம் நகர சபை எல்லைக்குள் வருபவர்களுக்கு,    இலவசமாக முகக் கவசங்களை   வழங்கவும் நகர சபை தீர்மானத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .