2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சந்தையில் விலைபோகாத மீன்கள்

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீனவர்களின் வலைகளில் சிறிய மீன்கள் பிடிபடுவது தற்போது அதிகரித்துள்ளதாகவும் இதனால், நீர்கொழும்பு, கல்பிட்டிய ஆகிய பகுதிகளிலுள்ள மீன்சந்தைகளில், மீன்களின் விலை வெகுவாகக் குறைவடைந்துள்ளதாகவும் மீன் வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சாலை, சூடை, உருளை, நெத்திலி ஆகிய சிறிய ரக மீன்களின் விலைகளே வீழ்ச்சியடைந்துள்ளதாக மீன் வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிலாபம் பிரதான மீன் சந்தையில், ஒரு கிலோகிராம் உருளை மீன், 80 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, புத்தளம், கற்பிட்டி கடற்கரைப் பிரதேசமான பத்தலங்குண்டுவில், ஒரு கிலோகிராம் உருளை மீன் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, சிலாபம் மாவட்ட மீனவர் சங்கத்தின் தலைவர் ரொசான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் பெரிய மீன்களின் விலையும் வீழச்சியடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சாலை மற்றும் சூடை மீன்கள் பெரிதளவு விலைபோகவில்லை என்று தெரிவிக்கும் வியாபாரிகள், கடந்த சில நாள்களாக நீடித்துவரும் மழையே இதற்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

விலைபோகாத சிறிய மீன்களைப் பதப்படுத்துவதில் சிரமம் உள்ளதால், அவற்றைக் குறைந்த விலைக்கு விற்கும் நிலை தோன்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .