2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கிறோம்’

Editorial   / 2017 ஜூன் 23 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏனைய சமய கோட்பாடுகளின் உரிய இடத்தை பாதுகாத்துக்கொண்டு பௌத்த சமய சூழலில்  சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலநறுவை, லக்ஸஉயன, வேலுவன விஜேராம விகாரையில், நேற்று (22) இடம்பெற்ற, புதிய மதகுருமாருக்கான வதிவிடத்தை சாசனத்துக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த சமூகத்தின் பல பாதகமான பிரச்சினைகளுக்கு சமய கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்வுகாண வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, சிறந்த சமூகத்தைக் உருவாக்குவதற்காக தற்போதைய இளம் தலைமுறையினர் மீண்டும் சமய தலங்களை நெருங்க வேண்டிய தேவையையும் சுட்டிக்காட்டினார்.

வரலாற்று புகழ்மிக்க பொலநறுவை திவங்க விகாரை மற்றும் தமிழ் மகா சாய விகாரையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, வரலாற்று பெறுமானங்களைப் பாதுகாத்து, அவற்றை அபிவிருத்தி செய்வதற்கு தொல்லியல் திணைக்களத்துக்கும், மத்திய கலாசார நிதிய  தலைவருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X