2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டெங்கு நோய் தடுப்பு, இலவச மருத்துவ சிகிச்சை

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூலை 14 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

ஹோமியோபதி மருத்துவ குழுவினாரால், டெங்கு நோய் தடுப்பு மற்றும் இலவச மருத்துவ சிகிச்சை நிகழ்வு என்பன சனிக்கிழமை (15) முழுநாளும், புத்தளம் - மன்னார் வீதியில் அமைந்துள்ள தாய் சேய் சிகிச்சை நிலையத்தில் இடம்பெறவுள்ளன.

டெங்கு நோய் உருவாகும் விதம், டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவ முறைகள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்கிலேயே இந்த மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இன்று காலை பத்து மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையில் இடம்பெறவுள்ள இந்த சிகிச்சை முகாமில் கலந்து கொள்வதன் மூலம் தம்மையும், தம்மைச் சூழவுள்ளோரையும், தமது உறவினர்களையும் ஆட்கொல்லி நோயான டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும், வருமுன் காப்பதே சிறந்த வழி என்றும் ஏற்பாட்டுக் குழு மேலும் தெரிவித்துள்ளது.

டெங்கு நோய் உருவாகும் விதம், அதை எவ்வாறு தடுத்தல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவ முறை பற்றி மக்களை விழிப்புணர்வு செய்வதும், டெங்கு தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதும் இந்நிகழ்வின் நோக்கமாக அமைந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .