2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாலங்களை புனரமைப்பதற்கு அனுமதி

ரஸீன் ரஸ்மின்   / 2017 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புத்தளத்திலிருந்து இலவங்குளம் வீதியூடாக மன்னார் செல்லும்  மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில், அந்தப் வீதியிலுள்ள 4 பாலங்களை புனரமைப்பதற்கு மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், வியாழக்கிழமை (03) இடம்பெற்றபோது மாவட்ட அபிவிருத்திக் குழுவின்  இணைத்தலைவர்களில் ஒருவரான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கொண்டு வந்த யோசனையை ஏற்றுக்கொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழு, இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

இந்தக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்,  நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன், மாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், டெனீஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

வட மாகாணத்துக்கும் தென்னிலங்கைக்குமிடையிலான போக்குவரத்தை இலகுபடுத்த இந்தப் பாதை பயன்தரும் என்பதால் குறித்த பாதையின் புனரமைப்பின் அவசியத்தை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இதன்போது வலியுறுத்தினார்.

தற்போது புத்தளத்திலிருந்து இலவங்குளம் வழியாக இருமருங்கிலும் துப்பரவுப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் மன்னார் உப்பாறு வரை இந்தத் துப்பரவுப் பணிகளை சீர்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர், அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

வெளிநாடுகளில் மேற்கொள்வது போன்று கிரவலிங் காபெட் முறையின் மூலம் இலவங்குளப் பாதையை செப்பனிடுவது சிறந்தது என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆலோசனை வழங்கினார்.

பறயனாலங்குளம் - வவுனியா பாதை, நேரியகுளம் - நெளுக்குளம் பாதை, மற்றும் தலைமன்னார் பாதை ஆகிவற்றையும் புனரமைப்புச் செய்யவேண்டுமெனவும் அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .