2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

புத்தளத்தில் 5,99,042 பேர் வாக்களிக்கத் தகுதி

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில்  5,99,042 பேர் வாக்களிக்கத்  தகுதி பெற்றுள்ளனரென, புத்தளம் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 5,87,683 பேர் வாக்களிக்கத்  தகுதி பெற்றிருந்த நிலையில், இம்முறை 11,359 பேர் புதிதாக தகுதி பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் மாவட்டம் 05 தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.  இதற்கமைய, புத்தளம் தொகுதியில் 1,44,450 பேரும், ஆனமடுவ தேர்தல் தொகுதியில் 1,21,672 பேரும், சிலாபம் தொகுதியில் 1,25,597 பேரும், நாத்தன்டிய தேர்தல் தொகுதியில் 95,936 பேரும், வென்னப்புவ தொகுதியில் 1,11,387 பேரும் இம்முறை வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 

இதேவேளை, தபால்மூலம் வாக்குப் பதிவை மேற்கொள்வதற்காக 14,665 விண்ணப்பங்கள், புத்தளம் தேர்தல் அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், 912 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதையடுத்து, 13,753 பேர் மாத்திரமே, வாக்குப் பதிவை மேற்கொள்ள தகுதி பெற்றுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X