2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புத்தளத்தில் இரண்டு வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

Editorial   / 2020 மார்ச் 19 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில், இரண்டு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனவென,  புத்தளம் மாவட்டச் செயலாளரும், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான சந்திர ஸ்ரீ பண்டார தெரிவித்தார்.

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (19) நண்பகல் 12 மணியுடன் நிறைவுபெற்றது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, முஸ்லிம் தேசியக் கூட்டணி உள்ளிட்ட 14அரசியல் கட்சிகளும், 20 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை  தாக்கல் செய்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தலைமையிலான குழுவும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா தலைமையிலான குழுவும்,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தேசிய  மக்கள் சக்தி சார்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேராவும் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து புத்தளத்தில் தராசு சின்னத்தில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு   சார்பில் கூட்டணியாக களமிறங்கவுள்ள நிலையில், அந்தக் கட்சியும் இன்று (19)  காலை  வேட்பு மனு  தாக்கல் செய்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .