2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புத்தளத்தில் பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு வில்பத்தில் விடுவிப்பு

ரஸீன் ரஸ்மின்   / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புத்தளம், மதுரங்குளி கரிக்கட்டை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு  வீதியோரத்தில் இருந்து பொதுமக்களால் பிடிக்கப்பட்ட மலைப்பாம்பொன்று, வனஜீவிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் புத்தளம் பிராந்திய அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

சுமார் 10 அடி நீளமுடைய குறித்த மலைப்பாம்பு, மதுரங்குளி, கரிக்கட்டை பகுதி வீதியோரத்தில் சுற்றித்திரிந்ததாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பிரதேச பொதுமக்கள் ஒன்று சேர்ந்து குறித்த மலைப்பாம்பை, சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின்னர் பாதுகாப்பாகப் பிடித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வனஜீவிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் புத்தளம் பிராந்திய அலுவலக அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த வன ஜீவிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் புத்தளம் பிராந்திய அலுவலக அதிகாரிகள் குறித்த மலைப்பாம்பை அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த மலைப்பாம்பை, வில்பத்து வனப் பகுதியில் நேற்று மாலை கொண்டுவந்து விடப்பட்டுள்ளதாக, வனஜீவிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் புத்தளம் பிராந்திய அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .