2024 மார்ச் 28, வியாழக்கிழமை

புத்தளம் மக்களுக்கான அறிவிப்பு

Editorial   / 2020 மார்ச் 29 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா வைரஸ் கண்காணிப்பு நிலையமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில்  அவர் மேலும் கூறியதாவது, புத்தளம் நகர சபைக்குபட்ட கடுமையங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தனேசியாவுக்கு சென்று கடந்த 17 ஆம் திகதி புத்தளத்திற்கு வருகை தந்த குறித்த நபர், நேற்று முன்தினம் (27) மாலை சுகவீனமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட குறித்த நபர், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனையை மேற்கொள்ள குருநாகல் வைத்தியசாலைக்கு அன்றைய தினமே மாற்றப்பட்டு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபருடைய குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரோடு நெருங்கிப் பழகி, தொடர்பை பேணி வந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அடையாளம் காணும் நபர்களை புத்தளம் சாஹிரா கல்லூரியில் அமைக்கப்படவுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தங்க வைத்து கண்காணிக்கப்படவுள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் முழுமையான கண்காணிப்பில் புத்தளம் நகர சபை, புத்தளம் சுகாதார பிரிவு, புத்தளம் பொலிஸார் ஆகியோரின் ஒத்துழைப்பில் இந்த நிலையம் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளது.

புத்தளம் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று (28) மாலை மாவட்ட செயலர் தலைமையில் இடம்பெற்ற அவசர கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என்றார்.

அத்துடன், கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பு பெற தங்களது வீட்டுக்குள்ளேயே இருந்துகொள்ளுமாறும், சட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவித்தலையும் விடுத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X