2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புறாக்களை திருடி குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் கைது

ரஸீன் ரஸ்மின்   / 2017 ஜூன் 26 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி பள்ளிவாசல்துறை வெள்ளங்கரை பிரதேசத்தில் 18 ஆயிரம் ரூபாய் பெறுமதியான புறாக்களைத் திருடினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ், அதே பிரதேசத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும், கற்பிட்டி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி, பள்ளிவாசல்துறை வெள்ளங்கரை பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குச் சென்ற குறித்த இளைஞன், அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த புறாக்கள் பற்றி விசாரித்துள்ளதுடன், சகல புறாக்களையும் விற்பனை செய்யும் நோக்கம் இருக்கிறதா என வினவியுள்ளார்.

எனினும், குறித்த புறாக்களை தான் ஆசைக்காக வளர்த்து வருவதாக புறாக்களின் உரிமையாளர், குறித்த இளைஞனிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தனது வீட்டில் இருந்த புறாக்கள் காணாமல் போயுள்ளதையடுத்து, கடந்த 23ஆம் திகதி புறாக்களின் உரிமையாளர் குறித்த இளைஞனின் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார்.

அப்போது குறித்த இளைஞனின் வீட்டில் காணாமல் போனதாகக் கூறப்படும் தனது 8 சோடிப் புறாக்கள் இருப்பதைக் கண்ட உரிமையாளர், இது தொடர்பில் கற்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட கற்பிட்டி பொலிஸார், புறாக்களைத் திருடிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபரான குறித்த இளைஞனையும் இத்திருட்டுச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த இளைஞனின் தந்தையையும் கைதுசெய்ததுடன், திருடப்பட்டதாகக் கூறப்படும் 8 சோடிப் புறாக்களையும் சந்தேகநபர்களின் வீட்டில் இருந்து மீட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களான மகனும் தந்தையும், புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம்.இக்பால் முன்னிலையில் சனிக்கிழமை ஆஜர்படுப்பட்டனர்.

இதன்போது குறித்த இளைஞனை ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யுமாறும் திருட்டுச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த தந்தையை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், திருடப்பட்ட 8 சோடிப் புறாக்களையும் 20ஆயிரம் ரூபாய் சரீரப்பிணையில் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறும், பதில் நீதிவான் எம்.எம்.இக்பால் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .