2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பூர்த்தி விழாவும் பட்டமளிப்பு வைபவமும்

Editorial   / 2017 ஓகஸ்ட் 27 , பி.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பீ.எம். முக்தார்

காலி கோட்டை அல் பஹ்ஜதுல் இப்ராஹீமிய்யா அரபுக் கல்லூரியின் 125ஆம் ஆண்டு பூர்த்தி விழாவும் 33ஆவது பட்டமளிப்பு வைபவமும், எதிர்வரும் செப்டெம்பர் 09ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு, கலாபீட வளாகத்தில் நடைபெறவுள்ளது.  

கலாபீட நிருவாகி நுஸ்கி முஹம்மத் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பிரதம அதிதியாக, புனித மக்கா பைதுல் பாஸியில் வசிக்கும் ஷாதுலியா தரீக்காவின் உலக ஆன்மீகத் தலைவர் (செய்கு ஸஜ்ஜாதா) சங்கைக்குரிய கலாநிதி அஷ்ஷெய்க் அஜ்வாத் அப்துல்லா அல் பாஸி அல் மக்கி அஷ்ஷாதுலியின் புதல்வர் சங்கைக்குரிய சட்டத்தரணி அஷ்ஷெய்க் முஹம்மத் பின் அஜ்வாத் அப்துல்லா அல் பாஸி அல் மக்கி அஷ்ஷாதுலி கலந்துகொள்வார்.  

மேலும், கலாபீடப் பணிப்பாளரும் கொழும்பு உம்மு ஸாவியா பிரதம இமாமும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கதீபுமான கலீபதுல் குலபா மௌலவி ஜே. அப்துல் ஹமீத் ஆலிம் (பஹ்ஜி), உம்மு ஸாவியா பரிபாலனசபைத் தலைவர் தேசபந்து அல்ஹாஜ் மக்கி ஹாஷிம், இஸ்லாமிய அறிஞர்கள், உலமாக்கள், கலீபாக்கள், பிரமுகர்கள் எட்பட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.  

விழாவில் பட்டம் பெறும் 09 மாணவர்களுக்கு “அல் பஹ்ஜி” சான்றிதழ்களை, சங்கைக்குரிய செய்கு நாயகம் வழங்கிவைப்பார் என, கலாபீட அதிபர் மௌலவி எம்.ரீ.எம். ரிஸ்வி (பஹ்ஜி) தெரிவித்தார்.  

இவ்விழாவில் கலாபீடத்தில் கல்வி கற்று பட்டம்பெற்று வெளியேறிய பழைய மாணவர்கள் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு, பணிப்பாளர் கலீபதுல் குலபா மௌலவி ஜே. அப்துல் ஹமீத் ஆலிம் (பஹ்ஜி) கேட்டுக்கொண்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .