2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மாணவர்கள் கூடும் இடங்களில் கஞ்சா புகைத்த இளைஞன் கைது

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூலை 13 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவர்கள் அதிகம் ஒன்று கூடும் இடங்களில் நின்று கஞ்சா சுருட்டு புகைக்கும் செயலில் ஈடுபட்டு வந்து நபரொருவர், நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளாரென வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். 

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஜ்ஜம்பல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவராவார்.

வைக்கால பிரதேசத்தில் அமைந்துள்ள பொலிஸாரின் வீதிச் சோதனைச் சாவடிக்கருகிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் நபரொருவர், கிகரெட் புகைத்துக் கொண்டிருந்ததை அவதானித்த வீதிச் சோதனைச்சாவடியின் கடமையிலிருந்த பொலிஸார், அவர் புகைக்கும் சிகரெட்டிலிருந்து வித்தியாசமான புகை வருவதை அவதானித்து, அது தொடர்பில் அந்நபரிடம் விசாரித்துள்ளனர்.

மேலும், குறித்த சிகரெட்டை சோதனை செய்த போது அந்த சிகரெட்டினுள்ளிருந்த புகையிலை அப்புறப்படுத்தப்பட்டு, அதனுள் கேரள கஞ்சா தூள் நிரப்பப்பட்டிருந்ததைக் கண்டறிந்துள்ளனர். 

பின்னர் அந்நபரைச் சோதித்த போது, அவரது காற்சட்டைப் பையினுள் அவ்வாறு தயாரிக்கப்பட்ட ஐந்து சிகரெட்டுகள் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர், இவ்வாறு கேரள கஞ்சாவால் தயார் செய்யப்பட்ட  சிகரெட்டுகளை  பாடசாலை மாணவர்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் நின்று, மாணவர்களுக்குத் தெரியும் வகையில் புகைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்துள்ளார் என்பதை பொலிஸார் தெரிந்துகொண்டுள்ளனர். 

பின்னர் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கைப்பற்றப்பட்ட கஞ்சா சிகரெட்டுகளுடன்  மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X