2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

“மாதாந்த சம்பள பணத்தை மாணவர்களின் கல்விக்கு செலவிடுவதாக உறுதி”

Editorial   / 2018 ஏப்ரல் 19 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

கற்பிட்டி பிரதேச சபையினால் வழங்கப்படும், மாதாந்த சம்பளப் பணத்தை, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக செலவிடப் போவதாக, கற்பிட்டி பிரதேச சபை அ.இ.ம.கா உறுப்பினர், முஹம்மட் ஆஷிக் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (17), கற்பிட்டி பிரதேச சபையினால் வழங்கப்பட்ட, முதலாவது மாத சம்பள பணத்தை, பள்ளிவாசல் ஒன்றுக்கு அன்பளிப்பாக வழங்கிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், பிரதேச சபையில் உறுப்பினராக பதவி வகிக்கும், எதிர்வரும் 04 வருடங்களுக்கு, சபையினால் வழங்கப்படவுள்ள மாதாந்த சம்பளப் பணத்தை, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் போன்ற நல்ல விடயங்களுக்காக வழங்கவுள்ளதாக அறிவித்தார். இதுதொடர்பில், கற்பிட்டி பிரதேச சபை செயலாளருக்கு, எழுத்து மூலமாக அறிவிக்கவுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனது சேவைக் காலத்தில், கல்வி விடயத்தில், ௯டிய கவனத்தை செலுத்தவிருப்பதுடன், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு, சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், படித்துவிட்டு தொழிலின்றி இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு, அவர்கள் விரும்புகின்ற துறைகளில், தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பது போன்ற பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நடைபெற்று முடிந்த கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசியக் கட்சியில், விருதோடை வட்டாரத்தில் போட்டியிட்டு, வெற்றிபெற்ற முஹம்மட் ஆஷிக், மேற்கொண்ட இம்முயற்சிக்காக,  கற்பிட்டி பிரதேச மக்கள் தமது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சிகளையும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .