2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

யானைகளை விரட்டியடிக்க விசேட வேலைத்திட்டம்

Editorial   / 2020 ஜனவரி 29 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

புத்தளம் மாவட்டத்தில்  மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக,அடுத்த மாதம் 5 ஆம் திகதி, விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக, புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க பிரியந்த தெரிவித்தார்.

இதற்கமைய, கிராமங்களில்  இருந்து காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கையை, நவத்தேகம பிரதேசத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

யானைகளின் அச்சறுத்தல்  காரணமாக உயிராபத்துகள் நேரும் என்ற அச்சத்துடன் தினமும் வாழ்ந்து வருவதாக, புத்தளம்  மாவட்டத்திலுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, புத்தளம் மாவட்டத்தின், கறுவலகஸ்வெவ, நவத்தேகம, வணாத்தவில்லு, மஹகும்புக்கடவல ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள், காட்டு யானைகளின் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரவு நேரங்களில் கிராமத்துக்குள் உள்நுழைந்து வீடுகள், பயிர்செய்கைகள் என்பற்றை, காட்டு யானைகள்  துவம்சம் செய்வதாகவும், பல வருடங்களான இவ்வாறான நிலையே காணப்படுவதாக,  மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி பலர் உயிரிழந்துள்ள அதேவேளை, அங்கவீனமுற்ற பலரும் இக் கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனரெனத் தெரிவிக்கப்படுகிறது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .