2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வரட்சியின் கோரம்: கத்தியை விற்ற விவசாயி

Editorial   / 2017 ஜூலை 18 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரட்சியால் பயிர்கள் அழிந்து போனமையால், விவசாயி ஒருவர், தனது பிள்ளைகளின் பசியைப் போக்குவதற்கு வீட்டில் இருந்த 800 ரூபாய் பெறுமதியான வெட்டுக் கத்தியை 350 ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவமொன்று, அநுராதபுரம், விளச்சிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த நான்கு போகப் பயிர்ச் செய்கையும் வரட்சி காரணமாக அழிந்துள்ளமையால், தனது பிள்ளைகளை வாழவைக்க முடியாத சூழ்நிலையில், குறித்த விவசாயி தன்னிடம் இருந்த ஒரேயொரு பெறுமதியான பொருளான வெட்டுக் கத்தியை விற்றுள்ளார்.

வீட்டுக்கு அருகில் உள்ள வர்த்தகர் ஒருவரிடம் விவசாயி கத்தியை விற்றுள்ளார். இதற்கு முன்னரும் பிறகு தருவதாகக் கூறி, வர்த்தகரிடம் பொருட்களை வாங்கியுள்ளார்.

விவசாயி மீது பரிதாபம் கொண்ட அந்த வர்த்தகர், பணத்தைக் கொடுத்து கத்தியைக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார்.

எனினும், விவசாயி கத்தியை எடுத்துச் செல்லாது கடையிலேயே வைத்து விட்டுச் சென்றதாக, குறித்த வர்த்தகர், ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .