2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

வாராந்த பங்குச்சந்தை நிலைவரம் 29.07.2019 - 02.08.2019

Editorial   / 2019 ஓகஸ்ட் 05 , மு.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

29.07.2019  

ஸ்ரீ லங்கா டெலிகொம், ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.8 பில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு எயிட்கன் ஸ்பென்ஸ், கொமர்ஷல் வங்கி, செலான் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு சம்பத் வங்கி, அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு டோக்கியோ சீமெந்து கம்பனி வாக்குரிமையற்ற பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

30.07.2019  

லயன் பிரெவரி, ஸ்ரீ லங்கா டெலிகொம்,  கொமர்ஷல் வங்கி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 2.1 பில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி, மெல்ஸ்டாகோர்ப் ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு ஹேலீஸ் ஃபப்ரிக், எயிட்கன் ஸ்பென்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு டோக்கியோ சீமெந்து வாக்குரிமையற்ற பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் அதிகளவு ஈடுபட்டனர்.  

31.07.2019  

சம்பத் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி, DFCC வங்கி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.0 பில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு லங்கா டைல்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு சம்பத் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு ஹேலீஸ் ஃபப்ரிக் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.  

01.08.2019  

கொமர்ஷல் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 682 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு எயிட்கன் ஸ்பென்ஸ், டயலொக் அக்ஸியாடா பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு ஹேலீஸ் ஃபப்ரிக் மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

02.08.2019  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ், டிஸ்டிலரீஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 900 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு சம்பத் வங்கி, ஹேலீஸ் ஃபப்ரிக், எயிட்கன் ஸ்பென்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு டோக்கியோ சீமெந்து கம்பனி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

வாரத்தில் அ.ப.வி.சு 0.37% உயர்வையும் S&P SL20 0.64% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 1.3 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .