2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு

S.Sekar   / 2021 மார்ச் 09 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறந்த வியாபார பெறுபேறுகளுடன் யூனியன் அஷ்யூரன்ஸ் 2020 ஆம் ஆண்டில் வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. நிறுவனத்தின் வழமையான நிகர வழங்கப்பட்ட தவணைக் கட்டணங்களின் பெறுமதி ரூ. 11.874 பில்லியன் எனும் பெறுமதியை எய்தியிருந்ததுடன், இலங்கையின் 4ஆவது மிகப் பெரிய ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர் எனும் ஸ்தானத்தை தனதாக்கியிருந்தது. வழங்கப்பட்ட உரிமை கோரல்களின் பெறுமதி 3.8 பில்லியன் ரூபாயாக அமைந்திருந்தது.

பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் குறிப்பிடுகையில், “உங்கள் வாழ்க்கைக்கு. எங்களது பலம் எனும் எமது உறுதி மொழிக்கமைய, இலங்கையின் 250,000க்கும் அதிகமானவர்களுக்கு தினசரி பாதுகாப்பை வழங்குவதற்கு எமது 3500க்கும் அதிகமான ஊழியர்கள் செயலாற்றுகின்றனர். கனவுகள், உறவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் என்பவற்றின் பாதுகாப்புக்காக நாம் முன்நின்றதுடன், எமது வாடிக்கையாளர்களை அதிகளவு கனவு காண்பதற்கும், அதிகளவு திட்டமிடுவதற்கும் நாம் வலுவூட்டியிருந்தோம். 2020 என்பது யூனியன் அஷ்யூரன்சை பொறுத்தமட்டில், பங்காளர் அனுபவத்தை மேம்படுத்துவதில் - தீர்வுகள், சேவைகள், கட்டமைப்புகள், ஊழியர்கள் மற்றும் செயன்முறைகள் என அனைத்திலும் புரட்சிகரமான ஆண்டாக அமைந்திருந்தது.” என்றார்.

 2020 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் மிகவும் குறிப்பான சாதனைகளில், 10 Court of the Table மற்றும் 5 Top of the Table சாதனையாளர்கள் அடங்கலாக, இலங்கையில் அதிகளவான MDRT (Million Dollar Round Table) சாதனையாளர் அங்கத்தவர்களை எய்தியிருந்தமை அடங்குகின்றது. ஆசியா இன்சூரன்ஸ் விருதுகள் வழங்கும் நிகழ்வில் பெருமைக்குரிய விருதான ஆண்டின் சிறந்த உள்ளக ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநர், LMD இனால் காப்புறுதித் துறையில் அதிகளவு விருதுகளை வென்ற வர்த்தக நாமம், HRD வேர்ள்ட் காங்கிரஸ் இனால் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமம் மற்றும் CMO குளோபல்/ CMO ஆசியா ஆகியவற்றினால் நிலைபேறான சந்தைப்படுத்தல் சிறப்பு ஆகிய விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. மேலும் தொடர்ச்சியான எட்டாவது வருடமாகவும் GPTW இனால் பணியாற்றுவதற்கு சிறந்த பணியிடமாகவும் கௌரவிக்கப்பட்டிருந்தது.

 கோம்ஸ் தொடர்ந்து குறிப்பிடுகையில், “2020 ஆம் ஆண்டின் எதிர்பாராத சவால்களுக்கு மத்தியில், எமது துரித வளர்ச்சி என்பது, எதிர்கால வினைத்திறனுக்கு முன்மாதிரியான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டு பகுதியில் பொருளாதார மீட்சி படிப்படியாக இடம்பெறும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அத்துடன், கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு பின்னரான புதிய வழமையில், அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர்களின் தேவைகளை கவனத்தில் கொண்டு, இலங்கையின் காப்புறுதித் துறையில் எல்லைகளை விஸ்தரிப்பதற்கும் நாம் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X