2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

20 வருடப்பூர்த்தியில் SDB

Editorial   / 2017 ஓகஸ்ட் 23 , பி.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது வங்கியிடமிருந்து கடன் வசதியைப் பெற்றுக்கொண்ட வாடிக்கையாளர்களிடம், அக்கடன் தொகையை மீள அறவிட்டுக்கொள்ளும், விருத்தி செய்யப்பட்ட புதிய வேலைத் திட்டம் ஒன்றை SDB வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இது, ‘ரெலி கலக்ஷன்’ என அழைக்கப்படும் இந்த முறை மூலம், SDB வங்கியிடமிருந்து கடன் பெற்றுக்கொண்ட வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய தொகை பற்றிய ஒரு பின்னூட்டல் பெற்றுக் கொடுக்கப்படும். குறித்த திகதியில் கடனை மீளச் செலுத்தத் தவறிய அனைத்து வாடிக்கையாளர்களையும் அடையாளம் கண்டுகொள்வதும், பின்னூட்டல் செய்வதும் இந்த வேலைத் திட்டத்தின் நோக்கமாகும். 

SDB வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகையின் மீள் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய திகதியிலிருந்து, மேலும் நான்கு நாட்கள் சலுகைக் காலமாக (Grace Period) வழங்கப்படும். பின்னூட்டல் முறை மூலம், ஐந்தாவது நாள் தொடக்கம் வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய கடன் தொகை தொடர்பாக தொலைபேசி மூலம் ஞாபகமூட்டல் செய்யப்படும். இதற்கு மேலதிகமாக கடனை மீளச் செலுத்தாதமைக்கான காரணங்கள் பற்றியும் அவர்களிடம் கேட்கப்படும். 

குறித்த கடன் தொகை அல்லது மாதாந்தக் கொடுப்பனவுகளைச் செலுத்த முடியாது, வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் தெரிவிக்கும் காரணங்கள் பற்றிக் கவனம் செலுத்திவரும் SDB வங்கி, அவற்றுக்குப் பொருத்தமான தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்கிறது. 

‘ரெலி கலக்ஷன்’ சேவை பற்றிக் கருத்துத் தெரிவித்த SDB வங்கியின் முகாமையாளர் (கடன் மீள் அறவிடல்) எஸ்.எச்.எஸ்.ஐ.உதயங்கன,  

“கொடுப்பனவுகளை மேற்கொள்ளத் தவறும் வாடிக்கையாளர்களுக்கு, இச்சேவை மூலம், முறையான அறிவுறுத்தல்கள் பெற்றுக் கொடுக்கப்படும்” என்று கூறினார்.

“இவ்வாறு உரிய நேரத்துக்கு தகவல்களைப் பெற்றுக் கொடுத்து, கடன் தொகையை முறையாகச் செலுத்த தேவையான பின்னணியை ஏற்படுத்திக் கொடுப்பது எமது நோக்கமாகும்” என்றும் அவர் தெரிவித்தார். 

SDB வங்கியின் உள்ளக மாற்றங்களுக்கு அமைய, சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் இந்தப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. 

இந்தச் சேவை மூலம், வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்படும் தகவல்கள், உரிய நேரத்துக்கு அவர்களைச் சென்றடைகிறது. நாடு தழுவிய ரீதியில் 91 கிளைகளைக் கொண்ட SDB வங்கி ஆரம்பிக்கப்பட்டு 20 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .