2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

2017இல் நாட்டின் உறுதியான வங்கியாக கொமர்ஷல் வங்கி தெரிவு

Editorial   / 2017 நவம்பர் 02 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2017இல் இலங்கையின் மிக உறுதியான வங்கியாக கொமர்ஷல் வங்கி தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஏசியன் பேங்கர் சஞ்சிகை இந்தத் தெரிவை வழங்கியுள்ளது. அத்தோடு ஐந்தொகை மதிப்பீடுகளின் படி மீண்டும் ஒரு தடவை ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 500 உறுதியான வங்கிகள் வரிசையிலும் கொமர்ஷல் வங்கி பட்டியலிடப்பட்டுள்ளது. 

கனடாவின் மொரன்டோ நகரில் இடம்பெற்ற SIBOS வருடாந்த நிகழ்வுகளின் ஒரு அங்கமாக இடம்பெற்ற ஒரு நிகழ்வில் கொமர்ஷல் வங்கிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. “நாட்டின் ஏனைய வங்கிகளோடு ஒப்பிடுகையில், வங்கி மிக உறுதியான திரவத் தன்மையைக் கொண்டுள்ளது. அதன் மூலதன நம்பக விகிதாசாரமும் அவ்வாறே அமைந்துள்ளது. முடிவடைந்த நிதி ஆண்டில் நிலைபேறான ஐந்தொகையை அது கொண்டுள்ளது. 3.08 என்ற உறுதிப் புள்ளியோடு இலங்கை வங்கிகளின் வரிசையில் கொமர்ஷல் வங்கி முன்னிலையில் உள்ளது” என ஏஸியன் பேங்கர் அறிவித்துள்ளது. 

ஐந்தொகையில் நிதிச் செயற்பாடு, அளவீட்டுக்கான ஆற்றல், ஐந்தொகை வளர்ச்சி, இடர் விவரம், இலாபத்தன்மை, சொத்து தரம், திரவத்தன்மை ஆகிய பிரதான அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு விரிவான வெளிப்படைத் தன்மை கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் இந்தத் தெரிவுகள் இடம் பெறுவதாக ஏஸியன் பேங்கர் தெரிவித்துள்ளது. 

இந்தப் புதிய சர்வதேச தர வரிசை பற்றி கருத்து வெளியிட்ட வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜெகன் துரைரட்ணம் “சவால்களை எல்லாம் கடந்து எமது ஒட்டுமொத்த ஸ்திரப்பாட்டையும் பேணுவதற்கான எமது ஆற்றலை சுதந்திரமான முறையில் உறுதி செய்யும் ஒரு முக்கியமான விருதாக இது அமைந்துள்ளது. ஏஸியன் பேங்கர் இவ்வாண்டு இன்னொரு விடயத்தையும் உறுதி செய்துள்ளது. இந்த பிராந்தியத்தில் இலாபத்தை பேணும் விடயத்தில் வங்கிகள் மீதுள்ள கணிசமான நெருக்குதலுக்கு அப்பால் நாம் மிகச் சிறந்த முறையில் செயற்பட்டுள்ளோம் என்பதே அந்த முக்கிய விடயமாகும்”  என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .