2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

30 வருட பூர்த்தி: செலான் வங்கியின் விசேட ஆராதனை

Editorial   / 2018 ஜூன் 06 , பி.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி தனது 30 வருடப் பூர்த்தியைக் கொண்டாடும் வகையில் நீர்கொழும்பு, தில்லந்துவ மல்வத்த புனித சூசையப்பர் தேவாலயத்தில் விசேட ஆராதனை நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஆராதனையை வண. பிதா. ஃபிரீலி முதுகுடாரச்சி மற்றும் வண. பிதா. சந்தசிறி பெரேரா ஆகியோர் முன்னெடுத்திருந்தனர்.  

 பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரட்ன, பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், கூட்டாண்மை முகாமைத்துவம், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இந்த ஆராதனை நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். ஆலயத்தின் நன்கொடைத் திட்டங்களுக்கு நிதியுதவிகளையும் வங்கி வழங்கியிருந்தது.

 
 30 வருடப் பூர்த்தியைக் குறிக்கும் வகையில், செலான் வங்கியின் தலைமையகத்தில் பிரித் நிகழ்வும், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜைகளும் இடம்பெற்றதுடன், புத்தளத்தில் விசேட இஸ்லாமிய மத வழிபாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பிரதான சமய அனுஷ்டான நிகழ்வுகளுக்கு மேலதிகமாக நாடு முழுவதிலும் சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

 செலான் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “செலான் வங்கியின் பயணத்தில் 30 வருட கால கொண்டாட்டம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் சமய அனுஷ்டானம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு நிகழ்வுகளுடன் முன்னெடுக்கத் தீர்மானித்தோம். வங்கியின் வெற்றியை நாம் கொண்டாடுவதுடன், எமது பங்காளர்களுடன் இதைக் கொண்டாட தீர்மானித்ததுடன், வங்கியின் 30 வருட பூர்த்தியை, இலங்கையர்களுடன் அர்த்தமுள்ள வகையில் கொண்டாட முன்வந்தோம்” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .