2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘96 Residencies’ நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

Editorial   / 2017 ஒக்டோபர் 12 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

JAT ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான JAT புரொபெர்ட்டி குழுமமானது, இதற்கு முன்னர் நாவல பிரதேசத்தில் நிர்மாணித்த 77th on 4th மற்றும் அமுனுகம பிரதேசத்தில் நிர்மாணித்த Forest Hill Villas ஆகிய இரு குடிமனைத் தொகுதிச் செயற்றிட்டங்களின் வெற்றியைத் தொடர்ந்து, இப்போது நுகோகொடை, பாகொட பிரதேசத்தில் ‘96 Residencies’ எனும் மூன்றாவது அபிவிருத்திச் செயற்றிட்டத்திற்கான நிர்மாணப் பணிகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளது.  

பெருமளவிலானோர் கலந்து கொண்ட இந்நிகழ்வு, அதற்காக அழைக்கப்பட்டிருந்த அதிதிகளின் பங்கேற்புடன் அண்மையில் இடம்பெற்றது.  

இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தோரில் - IWA நிறுவனத்தைச் சேர்ந்தவர்களான இந்திக சமரசிங்க மற்றும் வருண கோமிஸ், நவலோக்க கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தைச் சேர்ந்த கலான அல்விஸ், ஹெட்டியாராச்சி மற்றும் விக்கிரமசிங்க மற்றும் பேராசிரியை சித்திரா வெட்டிகார, Qserve நிறுவனத்தின் அதிகாரியான சுசில் வெட்டிகார மற்றும் எனேர்ஜிசோல்வ் இன்டர்நஷனல் நிறுவனத்தைச் சேர்ந்த மஹேந்திர ஜயலத் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.  

இந்நிகழ்வில் JAT ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை பிரதிநிதித்துவம் செய்து அந்நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஈலியன் குணவர்தன மற்றும் பணிப்பாளர் றிச்சர்ட் குணவர்தன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

JAT ஹோல்டிங்ஸ் நிறுவனமானது கடந்த 24 வருடங்களாக நிலப்பரப்புக்களை சிறப்பாக மாற்றியமைக்கும் வர்த்தகத் துறையில் செயற்பட்டு வருவதுடன், மிக மிக உயர்ந்த தரத்திலான உற்பத்தி, சேவைகளை தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் புகழ்பெற்றுத் திகழ்கின்றது. ‘வாடிக்கையாளர்களின் எதிர்பார்பையும் மிஞ்சிச் செயற்படல்’ எனும் நிறுவனத்தின் மையப் பெறுமதியானது, முகாமைத்துவப் பணிப்பாளரும் ஸ்தாபகருமான ஈலியன் குணவர்தன அவர்களிடமிருந்தான கூட்டாண்மைக் கலாசாரம் மற்றும் அடிப்படைப் பண்பியல்பு ஆகியவற்றில் ஆழமாக வேரூன்றியுள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X