2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

Allianz இன்சூரன்ஸ் மோட்டார் விபத்து மதிப்பீட்டு App

Editorial   / 2018 ஏப்ரல் 03 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

Allianz லங்கா, தனது Allianz 3D - Solera app ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த app இனூடாக, காப்புறுதிதாரர்களுக்கு துரதிஷ்டவசமாக விபத்தொன்று நிகழும் சந்தர்ப்பத்தில் சுயமாகவே வாகன சேத மதிப்பீடுகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

app ஐ பயன்படுத்தி சேதமடைந்த வாகனத்தைப் புகைப்படமெடுத்து, சேதமடைந்த பகுதியை 3D garage ஊடாக அடையாளப்படுத்தி அந்தப் படத்தை Allianz உடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.இந்த எளிமையான மூன்று படிமுறை செயற்பாட்டைப் பூர்த்தி செய்த பின்னர், வாகனத்தை உடனடியாகச் சம்பவ இடத்திலிருந்து அப்புறப்படுத்தி, தமது தினசரி செயற்பாடுகளை முன்னெடுக்கலாம். 

எனவே, இதனூடாக மதிப்பீட்டாளர் ஒருவர் சம்பவ பகுதிக்கு விஜயம் செய்யும் வரை காத்திருக்க வேண்டிய தேவை தவிர்க்கப்பட்டுள்ளது.  கிடைக்கப்பெற்ற படங்களை மீளாய்வு செய்து, Allianz லங்காவைச் சேர்ந்த பொறியியலாளர்கள் இழப்பின் அளவை மதிப்பீடு செய்வார்கள். அதன் பின்னர், செலுத்த வேண்டிய தொகையைத் தீர்மானித்து, அது தொடர்பான SMS ஒன்றைக் காப்புறுதிதாரருக்கு ஒரு வேலை நாளுக்குள் அனுப்பி வைப்பார்கள்.

மறுநாள், காப்புறுதிதாரருடன் நஷ்டஈடு அணியினர் தொடர்பை மேற்கொண்டு, மேலதிக விவரங்களை திரட்டிக் கொள்வதுடன், வழங்கப்பட்ட தொகை தொடர்பில் காப்புறுதிதாரர் திருப்தியடைந்துள்ளாரா என்பதைக் கேட்டறிவார்கள். இது தொடர்பில் பரஸ்பர உடன்பாடு எய்தப்பட்ட பின்னர், காப்புறுதிதாரரின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பி வைக்கப்படும்.

எனவே, Allianz 3D - Solera app இனால், காப்புறுதிதாரர்களுக்கு பெருமளவு காலம் மற்றும் சிரமம் தவிர்க்கப்படுகிறது. முழு நஷ்டஈடு செலுத்தும் செயன்முறையையும் ஒழுங்குபடுத்தியுள்ளதுடன், அனைத்துச் செயற்பாடுகளும் முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது.  

Allianz இன்சூரன்ஸ் லங்காவின் முகாமைத்துவ பணிப்பாளர் சுரேகா அலஸ் கருத்து தெரிவிக்கையில், “Allianz ஐச் சேர்ந்த நாம், தொழில்நுட்பத்தில் காணப்படும் நன்மைகளைப் பின்பற்றி வருகிறோம். இதனூடாக வாடிக்கையாளர்களுக்குப் பெருமளவு சௌகரியத்தை ஏற்படுத்துகிறோம்.

இதன் பிரகாரம், Allianz 3D - Solera மதிப்பீட்டு கையடக்கத் தொலைபேசி app ஐ இலங்கையிலுள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளோம். விபத்து நடைபெற்ற பகுதிக்கு, மதிப்பீட்டாளர் ஒருவர் விஜயம் செய்யும் வரை, வாடிக்கையாளர் காத்திருக்க வேண்டியதில்லை.  

இந்த app ஊடாக வழங்கப்படும் சௌகரியத்தை எமது காப்புறுதிதாரர்கள் பயன்படுத்துவார்கள் என  எதிர்பார்க்கிறோம். இது மிகவும் எளிமையானது, மூன்று படிமுறைகளில் சுயமாக மதிப்பீட்டை மேற்கொள்ளக்கூடியது” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .