2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

American Express அட்டைதாரர்களுக்கு புத்தாண்டு சலுகைகள்

Editorial   / 2018 மார்ச் 28 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடும்பங்கள் ஒன்றிணைந்து புத்தாண்டைக் கொண்டாடும் காலம் இது. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி American Express அட்டை அங்கத்தவர்களுக்கு வழங்கும் விசேட சலுகைகள், தவணைக் கொடுப்பனவு திட்டங்களினூடாக இந்தப் புத்தாண்டு காலப்பகுதியில் பெருமளவு அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.  

அனைத்துப் பண்டிகைக் காலத்துக்கும் பொருத்தமான அட்டை எனும் தனது உறுதிமொழிக்கமைய, மார்ச்  முதலாம் திகதி முதல், பண்டிகைக் காலத்துக்கான சிறந்த சலுகைகளை வழங்க முன்வந்துள்ளது. நாடு முழுவதிலும் 2018 ஏப்ரல் 15ஆம் திகதி வரை பெறுமதி சேர் வெகுமதிகளை வழங்க தீர்மானித்துள்ளது.  

புத்தாண்டுக்கு நீங்கள் திட்டமிட்டிருந்த நடவடிக்கைகள் எதுவாக இருந்தாலும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு இல்ல மேம்படுத்தல் முதல் குடும்ப விடுமுறை மற்றும் வெளிநாட்டு விடுமுறை போன்ற சலுகைகள் பலவற்றை வழங்க முன்வந்துள்ளது. அட்டை அங்கத்தவர்கள் தாம் கொள்வனவு செய்யும் ஆடைகள் 25% மீது கழிவையும் ஆபரணங்கள் மற்றும் அணிகலன்கள் மீது 60% வரையும், வீட்டுப்பராமரிப்பு தயாரிப்புகள் மீது 30% வரையும், தங்குமிட வசதிகளின் மீது 50% வரையும், உணவகங்களில் 25% வரையும், ஒன்லைன் சொப்பிங் மீது 50% வரையும் கழிவைப் பெற்றுக் கொள்ளலாம்.

முன்னணிப் பங்காளர் நிறுவனங்களில் 6 - 40 மாதங்கள் வரை தவணை முறையிலான கொடுப்பனவுத் திட்டங்களும் உண்டு. இந்தச் சிறந்த சேமிப்புகளினூடாக அட்டை அங்கத்தவர்களுக்கு இந்தப் பருவகாலத்தைப் பெருமளவு அனுகூலங்களுடன் அனுபவிக்க முடியும்.  

புத்தாண்டு சலுகைகள் தொடர்பில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் அட்டைகள் பிரிவின் தலைமை அதிகாரி நிலுக குணதிலக கருத்துத் தெரிவிக்கையில், “புத்தாண்டு என்பது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சிகரமாக பொழுதை களிப்பது; சுபீட்சத்தை கொண்டாடுவது; பாரம்பரியங்களைப் பின்பற்றுவது; சிறுவர்களுடன் மகிழ்ச்சி மற்றும் குதூகலமாக திகழ்வது என பல அம்சங்களை கொண்டிருக்கும். பரந்தளவிலான பங்காளர் வலையமைப்புடன் கைகோர்த்து பெருமளவு சேமிப்புகளை வழங்குவதுடன், 50,000 ரூபாய்க்கு மேற்பட்ட சகல கொள்வனவுகளுக்கும் 12 மாதங்கள் வரை மீளச் செலுத்தக்கூடிய தவணை முறை கொடுப்பனவு திட்டத்தையும் வழங்குகிறோம். அட்டைதாரர்களுக்கு எந்தவொரு பொருளையும் எங்கிருந்தும் கொள்வனவு செய்யலாம்” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .