2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

Android Oneஇன் சிறந்த அனுபவத்தை Nokia ஸ்மார்ட் அலைபேசிகளில்

Editorial   / 2019 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகம் இரு கைகளுக்குள் அடங்கிவிட்ட காலமிது. உணவின்றி, உறக்கமின்றி வாழ்ந்தாலும், அலைபேசி இல்லாமல், ஒரு நாள் இருந்துவிட முடியாது எனும் நிலையிலேயே நாம் அனைவரும் வாழ்ந்து வருகின்றோம். ஒரு தசாப்தக் காலப்பகுதிக்கு முன்னர், அலைபேசிகளில் அறிமுகமாகிய Android மென்பொருள், காலப்போக்கில் பெருமளவு வளர்ச்சியடைந்து, தற்போது Android 9 Pie எனும் கட்டமைப்பு அலைபேசி சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.   

உலகளாவிய ரீதியில் Android மென்பொருள் கட்டமைப்புக்கு அதிகளவு வரவேற்பு காணப்படுவதுடன், மொபைல் ஒபரேட்டிங் சிஸ்டம்களைப் பொறுத்தமட்டில், மொத்தச் சந்தைப்பங்கில், 75 சதவீதத்தை Android கொண்டுள்ளது. இதற்கு காரணம், Android மென்பொருள் கட்டமைப்பைக் கொண்ட சாதனங்களை, பொருளாதார மட்டத்தில் எந்த நிலையைச் சேர்ந்தவர்களாலும் கொள்வனவு செய்ய முடியும் என்பதுடன், பயன்படுத்தவும் இலகுவானதாக அமைந்துள்ளது என்பதாகும்.   

அலைபேசிகளில், ஒரு கால கட்டத்தில் அசைக்க முடியாத நிலையிலிருந்த நாமமான Nokia, இந்த Android மென்பொருளின் பாவனை அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், மாற்றமடைந்துவரும் உலகின் போக்குக்கமைய, தனது தயாரிப்புகளிலும் மெருகேற்றங்களை ஏற்படுத்தும் வகையில், பெருமளவு முதலீட்டில் தனது ஸ்மார்ட் அைலபேசிகளில்  Android மென்பொருளை அறிமுகம் செய்திருந்தது.   

Nokia ஸ்மார்ட் அலைபேசிகளை உற்பத்தி செய்யும் HMD Global நிறுவனம், தனது அண்மைய அறிமுகங்களான Nokia 3.2, 4.2, 2.2 ஆகியவற்றில் புதிய மெருகேற்றப்பட்ட Android பதிவான 9 Pieஐ உள்ளடக்கியுள்ளது. இதற்காக, கூகுள் நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் Android Oneஇல், HMD Global நிறுவனம் கைகோர்த்துள்ளதுடன், இதனூடாக Nokia சாதனங்கள் எவ்வாறு சிறந்த நிலையை எய்த வழிகோலியுள்ளது என்பது பற்றியும் பார்க்கலாம்.   

ஸ்டார் கவுன்டர் எனும் இணையப் பதிவுகள், பகுப்பாய்வு கட்டமைப்பின் பிரகாரம், Androidஇன் புதிய Pie மென்பொருள் கட்டமைப்பு தற்போது பாவனையிலுள்ள 14 சதவீதமான அலைபேசி சாதனங்களில் மாத்திரமே பயன்படுத்தப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, எஞ்சியுள்ள 86 சதவீதமான சாதனங்கள், இந்தப் புதிய உள்ளம்சத்தை, இதுவரையில் கொண்டிருக்கவில்லை என பொருள்படுகின்றது. இதன் காரணமாக, இந்தச் சாதனங்களில் காணப்படும் மென்பொருள்கள், காலம் கடந்தவையாக அமைந்துள்ள நிலையில், இவற்றினூடாக பாவனையாளர்களுக்கு கிடைக்கும் அனுகூலங்கள் மட்டுப்படுத்தப்பட்டவையாக அமைந்திருக்கும் என்பதுடன், குறித்த சாதனங்கள் மெதுவாக இயங்கும் நிலையை எய்தும்.   

பொதுவாக ஸ்மார்ட் அலைபேசி பாவனையாளர்கள், தாம் கொள்வனவு செய்யும் அலைபேசியை ஆகக்குறைந்தது 2 வருடங்களாவது பாவித்த பின்னரே, புதிய ஒன்றுக்கு மாற்றுவதற்கு விரும்புகின்றனர். சாதனத்தைப் பாதுகாப்பதற்காக திரையைப் பாதுகாக்கும் டெம்பர்ட் க்ளாஸ், அலைபேசி கைதவறி கீழே விழுந்தால் அல்லது கீறல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் கடினமான பின்புற கேஸ்கள் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். இருந்த போதிலும், சாதனத்தின் உள்ளிருக்கும் மென்பொருள் மெருகேற்றப்படாமல் காணப்பட்டால், இவற்றில் முதலீடு செய்வது என்பதும் பயனற்றதாகிவிடுகின்றது.   

இவற்றைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில், Android One திட்டத்தின் கீழ் Nokia சாதனங்கள் மாறுபட்டனவாக அமைந்துள்ளன. இவற்றில் காணப்படும் Android அசல் சாதனங்களாக அமைந்துள்ளதுடன், அவற்றில் எவ்விதமான மெருகேற்றங்களையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. கூகுள், உடனுக்குடன் Android மெருகேற்றங்களை வெளியிட்டதும், சகல Nokia சாதனங்களிலும் அவை உடனுக்குடன் மெருகேற்றம் செய்யப்படும். இதனூடாக Nokia பாவனையாளர்களுக்குச் சிறந்த Android அனுபவத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.   
பெரும்பாலான Android அலைபேசிகளில் Qualcommஇன் Snapdragon processorகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனூடாக மிருதுவான, தடங்கலில்லாத அனுபவத்தை பாவனையாளருக்குப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனாலும், Android கட்டமைப்பில் இது தங்கியுள்ளது. Android One திட்டத்தில் Nokia உள்ளடங்கியுள்ள நிலையில், பிந்திய Android மெருகேற்றங்கள், பாதுகாப்பு பெட்ச்கள் உடனுக்குடன் அனுப்பப்படும். மேலும் அலைபேசியை மெதுவாக இயங்கச் செய்யும் அநாவசியமான appகளும் காணப்படாது.   

Android சாதனமொன்றைக் கொண்டிருப்பதனூடாக எப்போதும் Androidஇன் சிறந்ததைப் பெற்றுக் கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டுவிட முடியாது. உங்கள் சாதனம் எப்போதும் மெருகேற்றப்பட்ட நிலையில் காணப்பட வேண்டும். Ai, Google Assistant போன்ற தொழில்நுட்பங்களில் Google பெருமளவு முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது. 

இந்நிலையில், உங்கள் அலைபேசி உற்பத்தியாளர் இந்தப் புதிய தொழில்நுட்பங்களை தமது சாதனங்களில் உள்ளடக்காவிடின், பாவனையாளர் எனும் வகையில், பயனை அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.   

Nokia சாதனங்கள் Android One திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. எனவே, அறிமுகம் செய்ததிலிருந்து 2 வருடங்கள் வரை சிஸ்டம் அப்டேட்களைப் பெற்றுக் கொள்வதற்கான தகைமையை கொண்டிருக்கும். மேலும், ஏனைய உற்பத்தியாளர்களை விட Google security update களை வேகமாக பெற்றுக் கொள்ளும். உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு Nokia சாதனத்துக்கும், 3 வருட காலத்துக்கு Google Updates, 2 வருட காலத்துக்கு OS updates வழங்கப்படுமென உத்தரவாதமளிக்கின்றது. சம காலப்பகுதியில், ஒரு சில அலைபேசி உற்பத்தியாளர்களுக்கு Google updatesஐ பெற்றுக் கொள்ள முடியாமல் போனமை தொடர்பில் உலகளாவிய ரீதியில் பரபரப்பாகப் பேசப்பட்டிருந்தது.   

Android 9 Pieஇல் காணப்படும் விசேட அம்சமாக, பற்றரி ஆயுள் காலத்தைக் குறிப்பிட முடியும். Nokia சாதனத்தின் AI வலுவைச் செம்மையாக்கி, பற்றரி பாவனையை நீடிப்பதற்கு வழிகோலுகின்றது.

ஆனாலும், சாதனத்திலிருந்து உச்ச பயனைப் பெற்றுக் கொள்வதற்கு, பிந்திய Android OS ஐ சாதனம் கொண்டிருக்க வேண்டும். 30 நிமிடங்களினுள் 50% வரை சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய Fast Charging தொழில்நுட்பம் Nokia ஸ்மார்ட் அலைபேசிகளில் காணப்படுகின்றது. Android சாதனத்தில் Dark Modeஐ செயற்படுத்துவதனூடாக, பற்றரி சேமிப்பை ஊக்குவிக்க முடியும்.   

Android சாதனங்களில் சிறந்த அலைபேசி கமெராக்கள் காணப்படுகின்றன. குறிப்பாக Nokiaஇல் ZEISS Optics lenses அடங்கியுள்ளன. புகைப்படங்களின் தெளிவைத் தீர்மானிப்பதில் ஹார்ட்வெயார் மாத்திரமன்றி, சாதனங்களில் காணப்படும் சொஃப்ட்வெயார்களும் முக்கிய அங்கம் வகிக்கின்றன.   

புதிய அலைபேசி ஒன்றை கொள்வனவு செய்ய எதிர்பார்க்கின்றீர்களாயின், எதைத் தெரிவு செய்வது என்பதில் உறுதியற்ற நிலையில் இருந்தால், நீங்கள் தெரிவு செய்ய வேண்டிய சாதனமான Nokia அமைந்துள்ளது. ஏனெனில் கூகுளிடமிருந்து updateகள் கண்டிப்பாக வழங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .