2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

Atlas Axillia நான்கு தங்கங்களை வென்றது

Editorial   / 2017 ஒக்டோபர் 13 , மு.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தரம் மற்றும் உற்பத்தித்திறன் விருதுகள் 2017 (NCQP) வழங்கும் நிகழ்வில் Atlas Axillia Pvt Ltd, நான்கு தங்க விருதுகளை வென்றிருந்தது. 

தரம் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான இலங்கை சம்மேளனத்தினால் வருடாந்தம் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது. நிறுவனத்தில் பணியாற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களால் குறித்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கும் தேசிய நிகழ்வாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.  

Kaizen பரிந்துரை பிரிவில் Atlas Axillia மூன்று தங்க விருதுகளை தனதாக்கியிருந்ததுடன், Quality Circles பிரிவில் ஒரு தங்க விருதையும் தனதாக்கியிருந்தது. இதனூடாக நிறுவனம் தனது தயாரிப்புகள் மற்றும் செயன்முறைகள் ஆகியவற்றில் காண்பிக்கும் அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. 

இந்த மாநாட்டின் மூலமாக, Six Sigma மற்றும் Kaizen போன்ற quality circlefis பின்பற்றும் தனிநபர்களுக்கும், அணியினருக்கும் கௌரவிப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளதுடன், நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயற்பாடுகள் செயன்முறைகள் போன்றவற்றில் மொத்த தர முகாமைத்துவ கவனத்தை செலுத்தும் வகையில் அமைந்துள்ளது. 2017 விருதுகள் வழங்கும் நிகழ்வு, Quality circles, continuous improvement மற்றும் Six Sigma, Kaizen suggestions மற்றும் Poster போட்டி ஆகிய பிரிவுகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. QC அணிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்த மீளாய்வுகள் மற்றும் அறிக்கைகளின் மூலமாக விருதுகளுக்காக வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 

Atlas Axillia பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மட் ஹம்ஸா கருத்துத் தெரிவிக்கையில், “Quality Circles மற்றும் Kaizen பிரிவுகளுக்கு தங்க விருதுகளை வெற்றியீட்டுவது என்பது சிறந்த சாதனையாகும். எமது அணியினர் தொடர்பில் நாம் அதிகளவு பெருமை கொள்வதுடன், இவர்கள் தொடர்ச்சியாக உயர் மட்ட அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வருவதனூடாக, இந்த விருதுகளில் எமக்கு விருதுகளையும் பெற்றுத்தந்திருந்தனர்” என்றார். 

Atlas Axillia பிரதம செயற்பாட்டு அதிகாரி விராஜ் ஜயசூரிய தெரிவிக்கையில், “தரம், வினைத்திறன் மற்றும் நிலைபேறான செயற்பாடுகள் போன்றவற்றில் நீண்ட காலமாக Atlas கம்பனி காண்பிக்கும் அர்ப்பணிப்புக்கு கிடைத்த சாதனையாக இது அமைந்துள்ளது. Atlas Axillia வில் எமது ஊழியர்கள் பெறுமதி வாய்ந்த சொத்துக்களாக காணப்படுகின்றனர். எமது அணியினர் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், வெற்றிகரமான செயற்பாட்டுக்கும் அதிகளவு வலுவூட்டப்பட்டுள்ளதுடன், ஊக்கப்படுத்தப்பட்டுள்ளனர்” என்றார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .