2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

BAIRAHA ஊழியர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள்

Editorial   / 2017 நவம்பர் 20 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

Bairaha, தனது நிறுவனத்தில் பணிபுரிவோரின் பிள்ளைகளான மாணவர்களுக்கு நான்கு புலமைப்பரிசில்களை வழங்கியுள்ளது. 

 கபொத உ / த பரீட்சையில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப்பெற்று, உள்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகி பட்டதாரி மாணவர்களாக கல்வியை முன்னெடுத்து வரும் பிள்ளைகளுக்கு உதவும் முகமாக இந்த புலமைப்பரிசில்களை Bairaha Farms PLC நிறுவனம் வழங்கியுள்ளது. 

 இதற்கு தகுதியான நான்கு பட்டதாரி மாணவர்களும் புத்தளம் மாவட்டத்திலுள்ள ஆனமடுவ என்ற இடத்திலுள்ள Bairaha நிறுவனத்தின் பண்ணையைச் சேர்ந்த ஊழியர்களின் பிள்ளைகளாவர். 

H.P.G சணவதியின் புதல்வனான J.M.N சதுரங்க மற்றும் A.H.M பத்மலதாவின் புதல்வியான J.M டினுஷா லக்மாலி ஆகியோர் முறையே பேராதனை மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்களில் இணைந்துள்ளனர்.  

ரூபா ரத்னாயக்கவின் புதல்வியான D.D.L. மதுஷானி மற்றும் ரொஷhனி தினுஷhவின் புதல்வனான I. டிலுக பிரியஞ்சன ஆகியோர் முறையே களனி மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களில் முகாமைத்துவ பீடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

 “இத்தகைய குடும்பங்களுக்கு நிதியியல் ரீதியான நிவாரணமாகவும், எமது ஊழியர்களை ஊக்குவிக்கும் ஒரு காரணியாகவும் இந்த புலமைப்பரிசில் வழங்கும் செயற்றிட்டத்தை Bairaha Farms PLC நிறுவனத்தின் கண்ணோட்டத்தை, இந்த வகையிலானச் செயற்றிட்டங்கள் பிரதிபலிக்கின்றன. இது தொடர்பில் தேசத்தின் எதிர்காலத்தின் மீது கவனம் செலுத்தி, உதவி மற்றும் முதலீடு செய்யும் உறுதியான தீர்மானத்தை நாம் மேற்கொண்டுள்ளோம்” என்றார். “Bairaha நிறுவனத்தின் கண்ணோட்டத்தை இந்த வகையிலான செயற்றிட்டங்கள் பிரதிபலிக்கின்றன. இது தொடர்பில் தேசத்தின் எதிர்காலத்தின் மீது கவனம் செலுத்தி, உதவி மற்றும் முதலீடு செய்யும் உறுதியான தீர்மானத்தை நாம் மேற்கொண்டுள்ளோம்”  என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .