2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

DFCC வங்கியின் தங்கவரம் அடகுசேவை வசதி

Editorial   / 2020 மே 25 , பி.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொவிட்-19 பரவல் காரணமாக பல குடும்பங்கள் நிதியியல் ரீதியாக இன்னல்களை அனுபவித்து வருவதால், அவர்கள் தமது அவசர பணத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு தீர்வாக தனது 'DFCC தங்கவரம்' அடகுசேவை வசதியை னுகுஊஊ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், ஒப்பந்தரீதியாக பொருட்களின் உரிமையை நிரூபிக்கும் திறன் கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை பிரஜைகளும் இப்போது தங்கம் அல்லது தங்க நகைகளை அடகு வைக்க முடியும். DFCC வங்கி 18 கரட் முதல் 24 கரட் தங்கத்தால் ஆன நகைகளை ஏற்றுக்கொள்வதுடன், அதிநவீன உபகரணங்களைப் பயன்படுத்தி இவை மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. 24 கரட் நகைகள் ரூபாய் 56,000க்கும் மேற்பட்ட மதிப்பைக் கொண்டிருப்பதுடன், 22 கரட் நகைகள் ரூபாய் 50,000க்கும் மேற்பட்ட  மதிப்பைக் கொண்டிருக்கும் என்பதுடன், ஆண்டுக்கு 12% வட்டி வீதத்தில் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த அடகுசேவை வசதிகளைப் பெற்றுக்கொள்வோர் தமது சௌகரியத்திற்கேற்ப அமைவாக அவற்றை மீட்டுக்கொள்வதற்கு அதிகபட்சமாக 12 மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

DFCC வங்கியின் தங்கவரம்  அடகுசேவை வசதியானது ஒப்பீட்டளவில் சிறந்த வட்டி வீதங்களில் அதிகூடிய முற்பண தொகை, அடகுவைக்கும் நகைகளின் அந்தரங்கம் மற்றும் அவற்றுக்கான பாதுகாப்பு உத்தரவாதம், தேவைப்படும்போது அவற்றை மீட்டுக்கொள்ள விரும்பினால் நெகிழ்வான கட்டணத் திட்டங்கள், முன் அறிவிப்பின்றி மீட்டுக்கொள்ளும் வசதி, வார இறுதி வங்கி சேவைகள் மற்றும் வார நாட்களில் நீட்டிக்கப்பட்ட வங்கிச்சேவை நேரம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த வசதிகள் அனைத்தும் எவ்விதமான மறைமுக கட்டணங்களுமின்றி, சந்தையில் கிடைக்கப்பெறும் மிகச் சிறந்த சேவையாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

உங்களுக்கு அருகாமையிலுள்ள DFCC வங்கி கிளைக்கு வருகை தந்து கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையை உங்களால் முன்னெடுக்க முடியும். அல்லது மேலதிக தகவல் விபரங்களுக்கு www.dfcc.lk என்ற வங்கியின் இணையத்தளத்தை பார்வையிடுங்கள். மேலதிக விபரங்களுக்கு DFCC வங்கியின் 24 மணி நேர தொடர்பு மையத்தை 1094 (11)2350000 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .