2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

DLB பொது முகாமையாளராக பதவி உயர்வு

Editorial   / 2018 ஜூன் 26 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் லொத்தர் துறையில் அதிகூடிய அனுபவசாலியும் வணிகத்துறை நிபுணருமான அநுர ஜெயரத்ன, அண்மையில் அபிவிருத்தி லொத்தர் சபையின் பொதுமுகாமையாளராகப் பணிப்பாளர் சபையால் நியமிக்கப்பட்டுள்ளார்.  

அதிசிறந்த லொத்தர் சந்தைப்படுத்தல் நிபுணரான இவர், தெற்காசிய நாடுகளில் உள்ளூர் லொத்தர் துறையில் மட்டுமல்லாது, சர்வதேச ரீதியிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி தனது தாய் நாட்டுக்குப் பெயரையும் புகழையும் ஈட்டிக்கொடுத்திருந்தார். 

ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சீனா, தென் ஆபிரிக்கா, கிறீஸ் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற  லொத்தர் சர்வதேச மாநாடுகளில் இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு, பல சர்வதேச மாநாட்டு அனுபவங்களைப் பெற்றுள்ளார். மகாபொலவின் பெருமைக்குரிய புதல்வனான அநுர, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகத் துறையில் தனது பட்டப்படிப்பை பூர்த்திசெய்திருந்ததுடன், வியாபார நிர்வாகத்துக்கான பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவை ஐக்கிய இராச்சியத்திலுள்ள லீஸ்டர்சியா பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டிருந்தார்.

அபிவிருத்தி லொத்தர் சபையில், 1994ஆம் ஆண்டு பயிற்சி உத்தியோகத்தராகச் சேர்ந்த அநுரவின் பாதையில், சந்தைப்படுத்தல் அதிகாரி, உதவிப் பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்), பதில் பொதுமுகாமையாளர், பிரதிப் பொதுமுகாமையாளர் (சந்தைப்படுத்தல்), பிரதிப் பொதுமுகாமையாளர் ஆகிய படிக்கட்டுகளைப் படிப்படியாகக் கடந்து, பொது முகாமையாளராக உயர்ந்துள்ளார்.  

அபிவிருத்தி லொத்தர் சபையின் முகாமைத்துவ தரவுகளிலிருந்து தெரியவருவதாவது, பொது முகாமையாளருக்கான வெற்றிடம் தனிப்பட்ட முறையில் திறைசேரியால் நிரப்பப்படும். ஆனால், முதல்முறையாக இந்தச் சம்பிரதாயத்தைத் தகர்த்து, பொது முகாமையாளர் சொந்தத் தரத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வானது சபையின் சரித்திரத்தில் ஒருமைல் கல்லாக அமைந்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .