2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

Dell சிறந்த பங்காளராக சிங்கர் தெரிவு

Editorial   / 2019 ஏப்ரல் 03 , பி.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கர் ஸ்ரீ லங்கா, Dell பங்காளர் விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஆண்டின் சிறந்த விநியோகத்தர் (நுகர்வோர்), பாரிய பிரிவின் சிறந்த விற்பனையாளர் (நுகர்வோர்) விருது ஆகியவற்றை பெற்றுக் கொண்டது. இந்த நிகழ்வு களுத்துறை, அனந்தரா ஹோட்டலில் இடம்பெற்றது.  

Dell வியாபாரத்தில் சிங்கர் பதிவு செய்திருந்த சிறந்த பங்களிப்பின் பெறுபேறாக ஆண்டின் சிறந்த விநியோகத்தருக்கான (நுகர்வோர்) விருதை சிங்கர் சுவீகரித்திருந்தது. நுகர்வோர் பிரிவில் உயர் பங்களிப்பு வழங்குநராக சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி திகழ்ந்தது.

மேற்படி பிரதான விருதுகளுக்கு மேலதிகமாக, ஆண்டின் சிறந்த நுகர்வோர் விநியோகத்தர் விற்பனை அதிகாரி விருது சிரேஷ்ட பிராந்திய முகாமையாளர் சரித பெரேரா, ஆண்டின் சிறந்த வாடிக்கையாளர் தீர்வுகள் (இரண்டாமிடம்) விற்பனையாளர் விருது கூட்டாண்மை விற்பனை முகாமையாளர் விருது வருண விக்ரமசிங்க ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X