2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

EU - ஆசிய மய்யம் கைகோர்ப்பு

Editorial   / 2020 ஜனவரி 10 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாமல் செய்வதற்கான சர்வதேச தினத்தை (VAW) குறிக்கும் வகையில் ‘பாலின வன்முறைகள் மற்றும் நீதியை நாடுவதற்கு பெண்களுக்கு காணப்படும் வாய்ப்புகள்’ தொடர்பான குழுநிலை கலந்துரையாடலை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசிய மையம் (TAF) ஆகியன இணைந்து அண்மையில் ஏற்பாடு செய்திருந்தன. 

1993 ஆம் ஆண்டின் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாமல் செய்யும் ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தில், பாலின வன்முறை என்பது, ‘பொது அல்லது பிரத்தியேக வாழ்க்கையில் உடலியல், பாலியல் அல்லது உளவியல் ரீதியில் அல்லது அச்சுறுத்தல்கள் அல்லது சுதந்திரத்தை அபகரித்தல் போன்றன அடங்கலான பெண்களுக்கு இம்சையை ஏற்படுத்தும் செயற்பாடுகள்’ என வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது.

போதியளவு சட்ட செயன்முறைகள் காணப்படாமையால், இவ்வாறு இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் பல பாதிக்கப்பட்டவர்கள் முறையிட தவறுகின்றனர். குற்றமிழைத்தவர்களுக்கு வழங்கப்படும் பாரதூரமற்ற ஒத்தி வைக்கப்பட்ட தண்டனைகள், நீதியை நாடும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமக்கான நீதியை பெற்றுக் கொள்ள நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை மற்றும் சேவை வழங்குநர்கள் போதியளவு அக்கறை காண்பிக்காமை போன்றன பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட ஆலோசனையை பெற்றுக் கொள்வதில் பின்நிற்பதற்கு ஏதுவான விடயங்களாக அமைந்துள்ளன.

இலங்கைக்காக ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தூதுவர் டெனிஸ் சைபி, விருந்தினர்கள், கலந்துரையாடுவோர் மற்றும் ஊடகவியலாளர்களை வரவேற்றிருந்தார். தமது வரவேற்புரையில்,

‘பாலியல் வன்முறை என்பது பலர் எதிர்கொண்ட போதிலும், பாதுகாப்பு, சீர்திருத்தம் மற்றும் சட்ட நடவடிக்கை தொடர்பில் பரந்தளவில் கவனிப்பற்ற நிலை காணப்படுகின்றது. பாதிக்கப்பட்டவரின் உரிமைகள் தொடர்பில் நடைமுறைச் சாத்தியமான செயற்பாடுகள் மற்றும் சட்டமியற்றல்கள் ஊடாக பாலியல் வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தி வருகின்றது. குற்றச் செயன்முறையின் சகல கட்டங்களிலும் பாதிக்கப்பட்டவரின் உரிமைகளுக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டு ஐரோப்பிய ஒன்றிய சட்டம் நிறுவப்பட்டுள்ளதுடன், இதில் உரிமைகள், உதவிகள் மற்றும் குற்றத்துக்கு ஆளான பாதிக்கப்பட்டவரை பாதுகாப்பது தொடர்பில் நியமங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.’ என்றார்.

ஆசிய மையத்தின் இலங்கைக்கான பிரதிநிதி தினேஷா டி சில்வா விக்ரமநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், ‘இரு காரணங்களுக்காக நாம் கைகோர்த்துள்ளோம். முதலில், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவருக்கு நீதியை பெற்றுக் கொள்ள முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை கௌரவித்தல். இரண்டாவதாக, பாலியல் வன்முறைகளுக்கு எதிராக நாளாந்தம் போராடக்கூடிய, நாளாந்தம் இடம்பெறக்கூடிய பாலியல் வன்முறைகளை இல்லாமல் செய்வதற்கு எம்மால் வழங்கக்கூடிய பங்களிப்பு ஆகியன அமைந்துள்ளன.’ என்றார்.

நிகழ்வில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டவர்களில், றுழஅநn in நேநன நிறைவேற்று பணிப்பாளர் சவித்திரி விஜேசேகர, சிரேஷ்ட குழந்தைப்பேறு மற்றும் பெண் நோயியல் நிபுணர் வைத்தியர். லக்ஷ்மன் சேனாநாயக்க, சட்டத்தரணி மஹேஷ் சேனாரட்ன மற்றும் சட்டத்தரணி ஏர்மிஸா தேகல் ஆகியோர் அடங்கியிருந்தனர். இந்த விவாதத்தின் வளவாளராக ஆசிய மையத்தின் நீதி மற்றும் பாலின பணிப்பாளர் கலாநிதி. ரமணி ஜயசுந்தர செயலாற்றினார்.

இந்த நிகழ்வில் கலந்துரையாடப்பட்ட தலைப்புகளில், போதியளவு உதவிச் சேவைகள் காணப்படாத பட்சத்தில், சுகாதாரம், சட்டம் மற்றும் நீதி துறைகளில் பாதிக்கப்பட்டவர் நட்புசார் சேவைகளை உருவாக்க வேண்டியதன் தேவை, பாலியல் உணர்திறன் தொடர்பில் அதிகாரிகளுக்கு காணப்படும் பயிற்சித் தேவைகள், சட்ட செயன்முறைகளில் சுகாதார துறையின் செயற்பாடு மற்றும் பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களுக்கு பொருத்தமான பதிலளிப்புகளை வழங்குவதில் அவற்றின் முக்கியத்துவம் போன்றன அடங்கியிருந்தன.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதி வதிவிட பிரதிநிதி ஃபைஸா எஃபிந்தி முடிவுரையை ஆற்றியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .