2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

FIGO HOLIDAYS நிறுவனத்தின் ஊழியர் மாநாடு

Editorial   / 2019 ஒக்டோபர் 24 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் முதற்றர சுற்றுலா நிறுவனமாகத் தெரிவு செய்யப்பட்ட FIGO HOLIDAYS நிறுவனத்தின் முதலாவது வருடாந்த ஊழியர் மாநாடு, கண்டியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு வழங்கிய சிறந்த பங்களிப்புகளுக்காக, FIGO HOLIDAYS நிறுவனம், 26ஆவது உலகளாவிய சுற்றுலாத்துறை விருது வழங்கல் (WORLD TRAVEL AWARD) நிகழ்வில், “இலங்கையின் முன்னணி சுற்றுலா முகவர் நிறுவனம் 2019” என்ற  விருது, வியட்நாமில் Phu Quocஇல் அமைந்துள்ள வின்பேர்ள் மாநாடு மண்டபத்தில், கடந்த 12ஆம் திகதி, ஆசியா, ஓசியானியா கலா- 2019 விழாவிலேயே வழங்கப்பட்டது.

இந்த விருது வழங்கல் நிகழ்ச்சித் திட்டமானது, உலகளாவிய சுற்றுலாத்துறையில் அங்கிகரிக்கப்பட்ட மிகவும் மதிப்புமிக்க கௌரவத்தை வழங்கும் ஒரு நிகழ்வாகும்.  சுற்றுலாத்துறையின் “ஒஸ்கர்” (OSCAR AWARD) விருது எனவும் இது அழைக்கப்படுகிறது. 

இவ்வெற்றியை, கடந்த 19ஆம் திகதி, கண்டி நகரிலுள்ள GRAND KANDYAN HOTELஇல் நடைபெற்ற FIGO HOLIDAYS நிறுவனத்தின் முதலாவது ஊழியர் மாநாட்டில், இரவு விருந்துபசாரத்தோடு மிகவும் விமர்சையாகக் கொண்டாடியது.

தனித்துவமான, இன்பகரமான மிகவும் திருப்திகரமான, எதிர்பார்ப்புக்களை விட அதிகமான சேவைகளை சுற்றுலாப் பயண வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதோடு தனது பெறுமதிமிக்க அர்ப்பணிப்புள்ள பொறுப்புவாய்ந்த, ஊழியர்களின் மூலம் தனது இலக்கை இலகுவாக அடைந்து கொள்ள முடியும் என, பிகோ ஹொலிடேஸ் நிர்வாகம் உறுதியாக நம்புகிறது.

இந்நிறுவனம் தனது முதலாவது ஊழியர் மாநாட்டை (ANNUAL CONVENTION), இத்தினத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைத்ததோடு, இம்மாநாட்டை வருடாந்தம் நடத்தவும் தீர்மானித்துள்ளது. ஊழியர் மாநாட்டை நடத்தியதன் முக்கியமான நோக்கம், தனது ஊழியர்களின் திறமைகளை இனங்கண்டு அவர்களுக்கான வெகுமதிகள், விருதுகள் வழங்கி அவர்களை ஊக்கிவிப்பதோடு மேலும் பல வரப்பிரசாதங்களை வழங்கி இச்சுற்றுலாத்துறையில் அவர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதாகும்.

இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், மகிழ்ச்சிகரமாக தொழில் செய்யக்கூடிய ஒரு சூழலை உருவாக்கவும். வருடாந்த ஊழியர் சுற்றுலா, ஊழியர் நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தவும் தமக்குத் தேவையான பல உதவிகளைப் பெற்றுக் கொள்ளவும் FIGO CARE CLUB என்ற ஒரு தொழிலாளர் நலன்புரிசேவை அமைப்பை நிறுவனத்தின் ஊழியர்களாலேயே நிர்வகிக்கக்கூடிய வகையில் இந்நிகழ்வில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

FIGO HOLIDAYS நிறுவனம், தனது இந்த வெற்றியை ஊழியர்களின் ஆதரவு இன்றி அடைந்திருக்க முடியாது என்று உறுதியாக நம்புகிறது. ஆகையால் இம்மாநாட்டின் மூலம் மேலும் பல வகையான விருதுகள் வழங்கி ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். அத்தோடு இந்நிறுவனம் மேலும் பல வெற்றிகளை இலங்கை சுற்றுலாத்துறையில் அடைவதற்கு இறைவனுடைய உதவியோடும், ஊழியர்களின் ஒத்தாசையோடும் தனது பயணத்தை மேலும் வலுவுடன் ஆரம்பித்துள்ளது.

சுற்றுலாப் பயணம் செய்வதற்கான சிறந்த இடம் என இலங்கையின் நற்பெயரை உலக அரங்கில் மேலும் உயர்த்திட FIGO HOLIDAYS நிறுவனம் தனது ஊழியர்களுடன் சேர்ந்து உறுதிபூண்டுள்ளது. FIGO HOLIDAYS தொடர்பில் மேலும் அறிய www.figoholidays.com எனும் இணையத்தளத்துக்கு பிரவேசிக்கவும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .