2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

Fairfirst இன்சூரன்ஸிடமிருந்து Buhuman

Editorial   / 2017 ஜூன் 16 , மு.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க ஓய்வூதிய திணைக்களம் ColomboRe காப்புறுதி முகவர்கள் மற்றும் Fairfirst இன்சூரன்ஸ் ஆகியன இணைந்து “Buhuman” சுகாதார காப்புறுதித்திட்டத்தை அண்மையில் மீள அறிமுகம் செய்துள்ளன. 2014இல் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த இந்தத் திட்டம், முன்னர் ColomboRe காப்புறுதி முகவர்களால் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. பின்னர் Fairfirst இன்சூரன்ஸினால் இந்தத் திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.  

“Buhuman” என்பது மதிப்பு எனப் பொருள்படும். அரச துறையில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுவோருக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட சுகாதார காப்புறுதித் திட்டமாகும். ஓய்வூதியம் பெறுவோரின் அதிகரித்துச் செல்லும் காப்புறுதித் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில், மேலதிக அனுகூலங்கள் உள்ளடக்கப்பட்டு இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 90 வருடங்கள் வரை பிரத்தியேக விபத்து காப்புறுதி காலம் உயர்த்தப்பட்டுள்ளதுடன், மருந்துப்பொருட்கள் கொள்வனவு, பரிசோதனைகள், ஸ்கானிங்கள் மற்றும் x-rayகள் போன்றவற்றை மேற்கொள்ள ஏற்படும் செலவுகள் ஆகியவற்றை மீள வழங்குவது போன்ற மேலும் சில அம்சங்கள் இந்த புதுப்பிக்கப்பட்ட திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. “Buhuman” திட்டத்தில் வழங்கப்படும் தற்போதைய அனுகூலங்களில், பிரத்தியேக விபத்து காப்புறுதி, வைத்தியசாலை அனுமதி காப்புறுதி மற்றும் பாரதூரமான நோய்களுக்கான காப்புறுதி போன்றன அடங்கியுள்ளன. இந்த காப்புறுதித்திட்டம் மூன்று திட்டங்களில் அமைந்துள்ளன. ரூ. 125,000 முதல் ரூ. 500,000 வரையில் இவை அமைந்துள்ளன. ஓய்வூதியம் பெறுவோர் அவர்கள் மத்தியில் காணப்படும் மூன்று திட்டங்களிலிருந்து ஒன்றை தெரிவு செய்து கொள்ளலாம். மாதாந்த தவணைக்கட்டணங்கள் ரூ. 200 முதல் ரூ. 400 வரை அமைந்துள்ளன. 

இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு ஓய்வூதிய திணைக்களத்தில் நடைபெற்றது.

 இதில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ், குயசைகசைளவ இன்சூரன்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், முகாமைத்துவ பணிப்பாளருமான கலாநிதி. சஞ்ஜீவ் ஜா மற்றும் ColomboRe காப்புறுதி முகவர்கள் நிறுவனத்தின் பொது முகாமையாளர் ரொஷானி சில்வா ஆகியோரும், மூன்று தரப்பையும் சேர்ந்த இதர சில அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளுக்கு உதவுவதற்கு காப்புறுதித்திட்டங்களுக்கான தேவை பெருமளவில் காணப்படுவதாக Fairfirst இன்சூரன்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், முகாமைத்துவ பணிப்பாளருமான சஞ்ஜீவ் ஜா தெரிவித்தார். "இது எமக்கு முக்கியத்துவம் வாய்ந்த காப்புறுதி ஒன்றாக அமைந்துள்ளதுடன் அதிகரித்துச் செல்லும் இலங்கையின் காப்புறுதிச் சந்தையின் கேள்வியை நிவர்த்தி செய்யக்கூடிய மற்றுமொரு படிமுறையாகவும் அமைந்துள்ளது" என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .