2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

GPW - Hall of Fame விருது வழங்கலில் AIA கெளரவிப்பு

Editorial   / 2017 ஜூலை 21 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணிபுரிவதற்கு மிகச்சிறந்த இலங்கை நிறுவனங்கள் விருதில், Hall of Fame விருதை AIA ஸ்ரீ லங்கா தனதாக்கியிருந்தது. பணிபுரிவதற்கு மிகச்சிறந்த இடம் (Great Place To Work®) என்ற அங்கிகாரத்தைத் தொடர்ச்சியாக 5ஆவது முறையாகவும் பெற்றுக் கொண்ட நிறுவனமாகவும் AIA திகழ்கின்றது.  

இந்த விருதை பெற்றுக்கொண்டமையின் மூலமாக, AIA தனது ஊழியர்களை மேம்படுத்துவது மற்றும் மிகவும் விரும்பத்தக்க பணிச்சூழலை உருவாக்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றமை உறுதியாகியுள்ளது.  

ஆகவே, ஒவ்வொரு ஊழியரும் அவர்கள் அதிகபட்சம் எவ்வளவு சிறப்பாக இருக்க முடியுமோ, அந்தளவுக்குச் சிறப்பாக இங்கே இருக்க முடியும். பணிபுரிவதற்கு மிகச்சிறந்த இடம் (Great Place To Work®) என்ற இந்த மதிப்பாய்வானது, AIA ஊழியர்கள் எந்தளவுக்கு நிறுவனத்துடன் இணக்கப்பாட்டுடன் உள்ளனர் என்ற அளவு மட்டத்தை அவதானிப்பதற்கு மிகவும் முக்கியமான குறிகாட்டியாக உள்ளதோடு, பெறுமதியான உள்நோக்குப் பார்வையையும் வழங்கியுள்ளது.  

‘தாக்கத் திட்டமிடல்’ என அழைக்கப்படும் செயன்முறையைப் பயன்படுத்துவதன் மூலமாக, ஊழியர்களது அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதற்கு மிகவும் ஆழமான புரிதலை AIA நிறுவனத்தினால் பயன்படுத்த முடியும். பணிபுரிவதற்கு மிகச்சிறந்த இடம் (Great Place To Work®) என்ற அங்கிகாரத்தை 5 வருடங்களுக்கு மேலாகப் பெற்றுவரும் AIA இனுடைய வெற்றிக்குரிய காரணமாக, அதனது ஊழியர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதை ஒரு முறையான அணுகுமுறை மூலமாகச் செவிமடுப்பதனையும் மற்றும் செயற்படுத்துவதனையுமே இது எடுத்துக்காட்டுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .