2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

Gala SLIA Awards Night நிகழ்வுக்கு JAT Holdings அனுசரணை

Editorial   / 2019 ஜனவரி 18 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கட்டடக்கலைஞர் நிறுவனத்தின் (SLIA) அவார்ட்ஸ் நைட் நிகழ்வுக்கு JAT Holdings அனுசரணை வழங்கியது. இந்த மாபெரும் நிகழ்வானது, ஹில்டன் கொழும்பில் நடைபெற்றதுடன் 2016ஆம் ஆண்டு ஆர்கிடெக்சருக்கான Aga Khan விருதை வெற்றியீட்டிய கட்டடக்கலைஞர். மரீனா டெபசம், அவர்கள் அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வின்போது SLIA யின் தலைவர் கட்டடக்கலைஞர். டீ.எச். விஜேவர்தன FIA (SL), சிரேஷ்ட பிரதி தலைவர், கவுன்சில் உறுப்பினர்கள், புகழ்பெற்ற ஆர்கிடெக்குகள் மற்றும் கட்டட துறையில் உள்ள மற்றைய தொழில் பிரதிநிதிகள் என்பனோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். SLIA யின் முக்கிய இந்த வருடாந்த விருது வழங்கல் நிகழ்வானது துறையில் உள்ள உள்ளூர் திறன்களை அங்கிகரித்து பாராட்டும் வகையில் நடைபெற்றது.   

இந்த விருது நிகழ்வின்போது JAT Holdings நிறுவனத்தின் நிறுவனர்/ நிர்வாக முகாமையாளர் ஈலியன் குணவர்தன உரையாற்றுகையில், ‘இலங்கையிலுள்ள கட்டட கலைஞர்கள் குழுக்களின் முயற்சியை பாராட்டும் வகையில் நடைபெறும் இந்த முக்கிய நிகழ்வில் பங்குபற்றுவதைக் குறித்து JAT பெருமையடைகின்றது. இத்துறையில் தனது வேர்களையூன்றி நிற்கும் ஒரு நிறுவனமாக இத்துறையை அதனது அதியுயரத்துக்கு எடுத்துச் செல்வதை குறித்து JAT பெரும் எதிர்பார்ப்புடன் செயற்படுகின்றது. இலங்கை கொண்டுள்ள ஆற்றல்களில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன் இந்நிகழ்விலிருந்தே எமது கட்டட கலைஞர்கள் கொண்டுள்ள திறமைகளை நாம் காணக்கூடியதாகவுமுள்ளது. இவ்வாறான நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்குவது மாத்திரமல்லாது உலக-தரம் பெற்ற SEA Kitchens, Herman Miller Furniture மற்றும் புரட்சிகரமான நீச்சல் தடாக பாதுகாப்பான தீர்வான எங்களுடைய சமீபத்திய உள்ளடக்கமான Crystalline போன்றவற்றை அறிமுகப்படுத்துவதன் மூலமும் தொடர்ச்சியாக இத்துறைக்கு எமது ஆதரவை வழங்குவோம் என்றும் இத்தயாரிப்புகள் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு விதிவிலக்கான உயர்தரமான தீர்வுகளை வழங்க கட்டட கலைஞர்களுக்கு மற்றும் கட்டடத் துறைக்கு உதவும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை” என்று குறிப்பிட்டார்.   கட்டடக்கலைத்துறைக்கு மகத்தானதொரு பங்களிப்பை ஆற்றிய வித்யஜோதி ஆர்கிடெக்.புரொபசர். லக்ஞன் அல்விஸுக்கு FIA (SL) வழங்கப்பட்ட ‘Lifetime Achievement Award’ விருது இந்நிகழ்வின் முக்கிய விடயங்களில் ஒன்றாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .