2024 மார்ச் 28, வியாழக்கிழமை

HNB இன் Walk-The-Talk நிறைவு

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

HNB, தனது காபன் வழித்தடங்களை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, வங்கி ஆரம்பித்த Walk-The-Talk சவாலை நிறைவேற்றுவதற்காக HNB தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தமது வாகனங்களை வீடுகளிலேயே நிறுத்திவைத்துவிட்டு சுற்றுச்சூழல் நட்பு பயண வழிகளைத் தேர்ந்தெடுத்தனர்.

கொழும்பு-10 இல் அமைந்துள்ள HNB தலைமை அலுவலகத்தின் வாகனத்தரிப்பிடம் வெறுமையாகக் காணப்பட்டது. HNB இன் பசுமை உறுதிப்பாட்டிற்கான தமது ஆதரவை மீளவலுப்படுத்தும் முகமாக குறித்த தினம் வங்கியின் ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வருகை தருவதற்காக பொதுப்போக்குவரத்து வாகனங்களையே பயன்படுத்தினர். மேலும் பலர் சைக்கிள் மூலமாகவும், கால்நடையாகவும் வேலைத்தளத்திற்கு வருகை தந்தனர்.   

பணிக்கு வந்த ஒவ்வொரு ஊழியருக்கும் சத்துமிக்க இலைக்கஞ்சி ஆரோக்கிய பானம் வழங்கப்பட்டது. இந்த சவாலை தலைமை அலுவலகத்தின் ஊழியர்கள் மிகவும் உற்சாகத்தோடும் சந்தோஷத்தோடும் வரவேற்றதுடன், ‘நாம் செய்யும் அனைத்திலும் ஈடுபாட்டுடன் இருக்கிறோம்’ என்ற தமது கொள்கையையும் வெளிப்படுத்தினர்.   

HNB இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ், “இலங்கையில் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான வங்கிகளுள் ஒன்று என்ற வகையில், காபன் வழித்தடங்களை குறைப்பதற்கான முறைகளை தேடிக்கண்டறிவது எமது கடமையென நாம் கருதுகிறோம். காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் சிறிய செயல்கள் கூட பெரிய நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தலாம். அந்தவகையில் Walk-The-Talk முயற்சியானது, மாற்றத்தை தொடங்குவதற்கும் ஊக்குவிப்பதற்கும் உதவக்கூடிய எங்களது ஒரு வழிமுறையாகும்“ என்று தெரிவித்தார்.   

ஒவ்வொரு ஊழியரதும் தினசரி வேலை மற்றும் அலுவலக சூழலில், சுற்றுச்சூழல் தரநிலைகள் மற்றும் உணர்வுகளை உருவாக்குவதற்கான HNB இன் பசுமை உறுதிப்பாட்டுக்கு இணங்க, இந்த முதலாவது Walk-The-Talk சவால் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X