2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

HNB க்கு மீண்டும் ‘ஏஷியன் பேங்கர்’ விருது

Editorial   / 2018 ஏப்ரல் 20 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹற்றன் நஷனல் வங்கி, வெற்றிகரமாக 10ஆவது தடவையாக 2018 இல், இலங்கையில் சிறந்த வாடிக்கையாளர் வங்கிக்கான விருதை, ஏஷியன் பேங்கர் சர்வதேச வாடிக்கையாளர் நிதிச் சேவைகள் 2018 (The ‘Asian Banker’s International Excellence in Retail Financial Services 2018 awards) விருது விழாவில் வென்றெடுத்துள்ளது. மலேஷியா, கோலாலம்பூரில் நடைபெற்ற ஏஷியன் பேங்கர் டிஜிட்டல் நிதி மாநாட்டுக்கு இணையாக, இந்த விருது விழா நடைபெற்றது.   

முக்கிய மூன்று பிரிவுகளை HNB வங்கி எட்டிமையே, இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட காரணமாக இருந்தது. தொடர்ச்சியாக இலாபத்தை பேணக்கூடிய வங்கியின் ஆற்றல், செயல்திறன் சிறப்பு ஊடாக செயல்முறைகளில் இடைவிடாத தொடர்ச்சியான முன்னேற்றம், முன்மாதிரியான டிஜிட்டல் வங்கி புத்தாக்கம் மற்றும் கூட்டு ஆகியனவே அவையாகும்.   

2018 ஆம் ஆண்டுக்காக HNB வென்றெடுத்த இந்த விருதானது, இலங்கையில் பாவனையாளர் வங்கித் துறையில் ஏஷியன் பேங்கர் விருதை 10ஆவது தடவையாக வென்றெடுத்த வங்கி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.  

HNB இன் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனத்தன் எலஸ் கருத்து தெரிவிக்கையில், “கடந்த ஆண்டில் நாம் பலமான மற்றும் தைரியமான சில நடவடிக்கைகளை 2020 இலக்காக வைத்து முன்னெடுத்தோம். சந்தைப் புத்தாக்க செயற்திட்டங்கள், இலகுவாக வாடிக்கையாளர்கள் எட்டும் வகையிலான டிஜிட்டல் சேவைகள் அதில் அடங்கின. 10ஆவது தடவையாகவும் இலங்கையில் சிறந்த வாடிக்கையாளர் வங்கிக்கான விருதை வெல்வதன் ஊடாகத் தொடர்ச்சியாக எமது அர்ப்பணிப்பை வழங்கி, தொழில்நுட்ப முன்னோடியாகத் திகழ்ந்து, வங்கித்துறைக்கு சேவையாற்ற முடியும் என எதிர்பார்க்கின்றோம்” எனக் கூறினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .