2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

Horlicks மற்றும் ஏனைய நுகர்வோர் ஆரோக்கிய ஊட்டச்சத்து உற்பத்திகள் யுனிலீவருக்கு கைமாற்றம்

Editorial   / 2018 டிசெம்பர் 25 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

GSK தனது மீளாய்வு திட்டத்துக்கமைய, தனது Horlicks மற்றும் ஏனைய நுகர்வோர் ஆரோக்கிய ஊட்டச்சத்து வர்த்தகநாமங்களை யுனிலீவர் நிறுவனத்துக்கு நிறுவனத்துக்கு கைமாற்றம் செய்யவுள்ளமை தொடர்பில், இன்று அறிவித்துள்ளது. Hindustan Unilever Limited (HUL) நிறுவனத்தின் பங்குகள், இந்திய ரூபாய் 1,717 என்ற, 15 தினங்களுக்கானத் தொகுதி சராசரி விலைப் பெறுமானத்தின் (Volume weighted average price - VWAP) அடிப்படையில், அண்ணளவாக 3.1 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் தொகைக்கு GSK Consumer Healthcare Limited (“GSK India”) நிறுவனமானது, Hindustan Unilever Limited (HUL) நிறுவனத்துக்குக் கைமாற்றம் செய்து கூட்டிணைக்கப்பட்டுள்ளது. இதே அடிப்படையில், அதன் நிகர வருமானம் அண்ணளவாக 2.4 பில்லியன் ஸ்‌டேலிங் பவுண்ஸ் என மதிப்பிடப்பட்டுள்ளது.  

இந்தியாவில் Horlicks மற்றும் ஏனைய ஊட்டச்சத்து உற்பத்திகள் GSK India நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதுடன், இந்நிறுவனமானது, தேசிய பங்குச் சந்தை (National Stock Exchange - NSE) மற்றும் மும்பை பங்குச் சந்தை (Bombay Stock Exchange -BSE) ஆகியவற்றில் நிரற்படுத்தப்பட்டுள்ள ஒரு பொதுவுடமை நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற நிலையில், அதன் 72.5% பங்குகளை GSK கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NSE மற்றும் BSE ஆகிய பங்குச்சந்தைகளில் நிரற்படுத்தப்பட்டுள்ள ஒரு பொதுவுடமை நிறுவனமான GSK India நிறுவனம், HUL நிறுவனத்துடன் கூட்டிணைப்புச் செய்யப்படுகின்ற இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, HUL நிறுவனத்தின் அண்ணளவாக 5.7% பங்குகளை GSK நிறுவனம் தனது உடமையாகக் கொண்டிருக்கும். இந்த நடவடிக்கை பூர்த்தியாகியமையைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டின் நிறைவில் GSK நிறுவனம், தனது பங்குகளை HUL நிறுவனத்துக்கு விற்பனை செய்ய எண்ணியுள்ளது. இந்த விற்பனை நடவடிக்கையானது, சந்தை நிலைவரங்களைக் கருத்தில் கொண்டு GSK நிறுவனம் பொருத்தமானத் தருணங்களில் படிப்படியாக அதனை முன்னெடுக்கும். 

மேலும், GlaxoSmithKline Bangladesh Limited மற்றும் ஏனைய நாடுகளிலும் GSK நிறுவனத்தின் ஆரோக்கிய ஊட்டச்சத்து செயற்பாடுகள் தொடர்புபட்ட ஏனைய வர்த்தகநாம உரிமைகளின் 82% பங்கை GSK நிறுவனம் யுனிலீவர் நிறுவனத்திற்கு விற்பனை செய்யவுள்ளதுடன், இதன் மூலமாக 566 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் தொகைக்கு சமமான பணத்தை அது ஈட்டிக்கொள்ளும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .