2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

House of Lux இடமிருந்து உலகில் மிகச்சிறந்த புதிய உற்பத்திகள்

Editorial   / 2018 ஜனவரி 18 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல ஆண்டு காலமாக இலங்கை மங்கையரின் மனங்களை வென்ற, லக்ஸ், நாளுக்கு நாள் மாறிவரும், நவீன பெண்களின் மென்மை, மற்றும் அவர்களின் மனங்களை நன்கறிந்து, அவர்களைத் தொடர்ந்து கொண்டாடுவதில் லக்ஸ் பிரபல்யம் பெற்றுள்ளது. 

கடந்த 16 ஆம் திகதி ஷங்கிலா கொட்டலில் நடைபெற்ற, House of Lux 2018 என்ற ஈடிணையற்ற ஆடம்பரத்துடன் கூடிய நறுமணம்மிக்க நிகழ்வில், ஒவ்வொரு நறுமணத்துக்கும் ஒவ்வொன்றாக நான்கு வலையங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நறுமணத்தை விருந்தினர்கள் அனுபவிக்க ஏற்பாடாகி இருந்தது. 

இந்நிகழ்வில், “ஒரு பெண் நேற்று இருந்ததைவிட, இன்றும் நாளையும் தொடர்ந்து வரும் ஒவ்வொரு கணமும் சிறப்பானவளாகத் மிளிர்வதையே நாங்கள் விரும்புகின்றோம். லக்ஸின் மிகச் சிறந்த நறுமணத்தரம் மூலம் ஒவ்வொரு பெண்ணும் வலுவூட்டப்படுவதோடு, அவள் தனது தனித்துவமான நறுமணத்தை உணர்ந்து கொள்வதற்கு உதவியளிக்கின்றது. இந்தப் பிரத்தியேக நறுமணத்தின் மூலம், உங்கள் மேனியின் அழகான பரிமாணத்தை நீங்கள் கண்டறிய முடியும். இவை உங்களைப் பலமூட்க்கூடிய வலுவான சறிய லக்ஸ் கட்டிகளாகும்” என யுனிலீவர் நிறுவனத்தின் சரும தூய்மையாக்கல் மற்றும் குழந்தைகள் பிரிவின் தலைமை அதிகாரி தனுஷ் ஏக்கநாயக்க தெரிவித்தார். 

யுனிலீவர்  நிறுவனத்தின் தனிநபர் பராமரிப்பு சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷர்மிளா பண்டார, இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது, “உயிரோட்டமுள்ள அதிய வாசனை அனுபவத்துக்கு உங்களை வரவேற்கிறோம் என்றார். ஒரு நவீன பெண்ணுக்கு அவளுடைய மென்மையான உணர்வுகளைத் தொடர்ச்சியாக வௌிப்படுத்துவது மிகவும் அவசியமாகும். அதனால்தான் லக்ஸ், உலகில் மிகவும் தனித்துவமானதும் பிரபலானதுமான அழகுச்சாதன வர்த்தக நாமமாகும். லக்ஸ் இலங்கையில் 75 ஆண்டுகாலமாக தனித்துவத்துடன் விளங்குவதுடன், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாட்டிலும், தலைமுறை தலைமுறையாகப்  பெண்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. லக்ஸின் சக்தி என்பது, அழகை மட்டும் தராமல், உணர்வையும் கூடவே தருவதாகும். 190 ஆம் ஆண்டுத்தொடக்கத்தில் எளிமையாக ஆரம்பிக்கப்பட்டு, லக்ஸ் திரையுலக நட்சத்திரங்களின் அழகுக்கான இரகசியத் தேர்வாக இருந்து வருகின்றது. லக்ஸ் பெர்பியும் பார் சேகரிப்புகள், சந்தையில் உள்ளஏனைய சவர்க்காரங்களைவிட தரம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது” என்று தெரிவித்தார். 

லக்ஸ் பார் சேகரிப்புகளில் மூன்று வேறுபட்ட நறுமணப்பொருட்கள் உள்ளன. French Magnolia, Kashmir Wood Scent  என்பவற்றால் உருவான Charming Magnolia. Egyption Rose, Musk Vanila என்பவற்றால் உருவான Hypnotic Rose. Japanese Gardenia மற்றும் Cedarwood Oil Scent என்பவற்றால் உருவான Elegant Gardenia  ஆகியன  சிறந்த உற்பத்தித் தெரிவுகளாக உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றை விட ,Magical Spell  உற்பத்தியானது, மிகவும் அரிதான கறுப்பு ஓர்க்கிட் நறுமணத்தைத் தருகின்றது. ஜுனிப்பர் எண்ணெயின் பிரித்தெடுப்பும் யுனிலீவரின் தொழில்நுட்பமும் இதனுடன் இணைவதால் இதனை உபயோகிக்கும் பெண்கள் நாளொன்றில் குறைந்தது எட்டு மணிநேரமாவது, தாங்கள் உபயோகித்த உடற்கழுவுகைத் திரவத்தின் நறுமளத்தைத் தாங்கியவர்களாக இருப்பார்கள் என யுனிலீவர் நிறுவனத்தின் வர்த்தகச் சின்ன முகாமையாளர் இனுர ஜெயசூரிய தெரிவித்தார்.   

படப்பிடிப்பு: வருண வன்னியாராச்சி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X