2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

IIT இன் MBA பட்டமளிப்பு விழா

Editorial   / 2019 ஜனவரி 11 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

Informatics Institute of Technology (IIT), ஐக்கிய இராச்சியத்தின் Canterbury Christ Church University (CCCU) பல்கலைக்கழகத்துடன் இணைந்து, முதல் முறையாக Master of Business Administration (MBA) பட்டமளிப்பு விழாவை முன்னெடுத்தது.  

CCCU இன் துணை வேந்தரும், முதல்வருமான Prof. Rama Thirunamachandran பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாகக் கலந்து சிறப்பித்துள்ளதுடன், Kapruka.com இன் பிரதம நிறைவேற்று அதிகாரியான Dulith Herath பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்துள்ளார். CCCU இல் MBA கற்கைநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ள மாணவர்களுக்கு, நிகழ்வில் பட்டமளிப்பு வழங்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து மிகச் சிறந்த பெறுபேறுகளுக்கான ‘Dr. Gamini Wickramasinghe -Gold Medal’ S. A. D. Nimesha Ashinshanie வுக்கு வழங்கப்பட்டது.  

Kent மற்றும் Medway ஆகியவற்றுக்கு இடையில் 16,000 மாணவர்களுடன் ஒரு நவீன பல்கலைக்கழகமாக Canterbury Christ Church University (CCCU) இயங்கி வருகின்றது. பல்வேறு வகையான கல்வி, தொழில் சார் பாட விதானங்களில் அதன் கற்கைநெறிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வலிமைமிக்க இன்றைய வர்த்தகச்சூழலில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இடமளிக்கும் வகையில், முகாமைத்துவப் பதவியை நோக்கித் தம்மை வளர்த்துக் கொள்ள விரும்புகின்ற மாணவர்களைத் தயார் செய்கின்ற ஒரு மேற்பட்டப்படிப்பு கற்கைநெறியாக, CCCU வழங்கும் Master of Business Administration (MBA) பட்டம் அமைந்துள்ளது. 

தற்போதைய ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட, பூகோளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தை மாணவர்கள் சிறப்பாக விளங்கிக் கொள்ள உதவும் வகையில் ஆழமான, சர்வதேச முன்னோக்கை ஒவ்வொரு பாட அலகும் கொண்டுள்ளது.

இக்கற்கைநெறியை, வெற்றிகரமாகப் பூர்த்தி செய்வதன் மூலமாக, மாணவர்கள் தமது தொழில்வாய்ப்புத் திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்புக் கிட்டுவதுடன், நாட்டை விட்டுச் செல்ல வேண்டிய தேவையின்றி, உலகத்தரம் வாய்ந்த மேற்பட்டப்படிப்புத் தகைமை ஒன்றை பெற்று, தமது தொழில்களில் வளர்ச்சி காண முடியும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X