2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

INSEE சங்ஸ்தா பேரபிமானம் பெற்ற வீடமைப்பு, நிர்மாண வர்த்தக நாமமாக தெரிவு

Editorial   / 2020 ஜூன் 02 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மக்களின் பேரபிமானம் பெற்ற சீமெந்து வர்த்தக நாமமான INSEE சங்ஸ்தா, தொடர்ச்சியாக ஒன்பதாவது வருடமாகவும், ஆண்டின் சிறந்த மக்கள் பேரபிமானம் பெற்ற வீடமைப்பு மற்றும் நிர்மாண வர்த்தக நாமமாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. அண்மையில் இடம்பெற்ற SLIM -நீல்சன் மக்கள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் இந்த பெருமைக்குரிய விருதை ஐNளுநுநு சங்ஸ்தா தனதாக்கியிருந்தது.

சங்ஸ்தா சீமெந்தின் மீது இலங்கையின் நுகர்வோர்கள் கொண்டுள்ள ஒப்பற்ற நம்பிக்கையை மேலும் உறுதி செய்வதாக இந்த உயர் விருது அமைந்துள்ளது. குறிப்பாக, சங்ஸ்தா சீமெந்தின் உயர் தரம், நீடித்த உழைப்பு மற்றும் தொடர்ச்சியான தயாரிப்பு புத்தாக்கம் போன்றவற்றினூடாக விற்பனையில் பிரத்தியேகமான உயர்மட்ட நிலைகளை கொண்டுள்ளது.

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த SLIM -நீல்சன் மக்கள் விருதுகள் மூலமாக, மக்களின் குரல்கள் பிரதிபலிக்கப்படுகின்றன. வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த மக்களின் அபிமானம் வென்ற வர்த்தக நாமங்களுக்கு பொது மக்களுக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பளித்து, அதனூடாக வர்த்தக நாமங்களுக்கு உரிய கௌரவிப்பு சேர்க்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 3 இல் 1 இல்லங்கள் INSEE சங்ஸ்தா சீமெந்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டிருந்த கருத்துக்கணிப்பில் மக்களின் முதல் தர தெரிவுக்குரிய வீடமைப்பு, நிர்மாண வர்த்தக நாமமாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.

INSEE சீமெந்து ஸ்ரீ லங்காவின் நிறைவேற்று உப தலைவரும் சந்தைப்படுத்தல், விற்பனை, புத்தாக்கங்களுக்கான பணிப்பாளருமான யான் குனிக் கருத்துத் தெரிவிக்கையில், “தொடர்ச்சியான தயாரிப்பு, செயன்முறை புத்தாக்கங்களினூடாக சங்ஸ்தா வர்த்தக நாமத்தின் உயர் தரம், வினைத்திறனை தொடர்ச்சியாக பேணுவதற்கு நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பின் காரணமாக, இலங்கையர்களின் பேரபிமானத்துக்குரிய வர்த்தக நாமமாக மீண்டும் ஒரு முறை தெரிவு செய்யப்பட்டுள்ளோம். சங்ஸ்தா சீமெந்து வர்த்தக நாமத்தின் ஆழமான பிணைப்புகள் காரணமாக, INSEE சீமெந்து மற்றும் கொங்கிறீற் தயாரிப்பு தெரிவுகளின் தரத்தை மேம்படுத்த எமக்கு முடிந்திருந்ததுடன், பயன்பாடு மற்றும் அனுகூலங்களையும் மேம்படுத்தவும் முடிந்தது” என்றார்.

குனிக் மேலும் குறிப்பிடுகையில், “இந்தப் பெருமைக்கு காரணமாக அமைந்த வீடமைப்பு சமூகங்கள், கொத்தனார்கள், பிரதம கொத்தனார்கள், ஒப்பந்தக்காரர், தொழில்நுட்ப அதிகாரிகள், பொறியியலாளர்கள், கட்டடக்கலைஞர்கள், விநியோகத்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். இலங்கையின் நிர்மாணத் துறையை, சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலைக்கு கொண்டு செல்வதற்கு எமது தொடர்ச்சியாக அர்ப்பணிப்பான செயற்பாடுகளை நாம் உங்களுக்கு மேலும் உறுதி செய்கின்றோம்” என்றார்.

இலங்கையின் பழமையான சீமெந்து வர்த்தக நாமம் எனும் பெருமையையும், நாட்டின் முதலாவது பிளென்டட் (SLS 1253 சான்றிதழின் கீழ் போர்ட்லன்ட் சுண்ணக்கல்லுடன் பிளென்ட் செய்யப்பட்டது) சீமெந்து நாமம் எனும் பெருமையையும் கொண்டுள்ளது. உயர் வலிமை மற்றும் கொங்கிறீற்றின் நீடித்த உழைப்பு ஆகியன INSEE சங்ஸ்தாவினால் வழங்கப்படுவதுடன், நுகர்வோரின் தேவைக்கமைய, காலநிலை மாற்றத்துக்கு பொருத்தமான வகையிலும், சந்தையில் காணப்படும் எதிர்பார்ப்புகளுக்கமையவும் உயர் மட்ட செயலாற்றும் தன்மை மற்றும் குறைந்தளவு நீர் தேவை ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

இலங்கை கட்டளைகள் நிறுவனத்திடமிருந்து SLS 1253:2015 சான்றிதழைப் பெற்ற பிளென்டட் சீமெந்து வகையான INSEE சங்ஸ்தா, இலங்கை கிறீன் பில்டிங் கவுன்சிலிடமிருந்து (GBCSL) கிறீன் பில்டிங் சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதலாவது சீமெந்து தயாரிப்பாக அமைந்துள்ளது. சிலோன் இன்ஸ்ரிடியுட் ஒஃவ் பில்டர்ஸ் (CIOB) இடமிருந்து கிறீன் மார்க் கோல்ட் விருதையும் INSEE சங்ஸ்தா பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .