2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

INSEE சீமெந்தின் புத்தாக்க கலாசாரம் பங்களிப்பு

Editorial   / 2020 மார்ச் 26 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசத்தின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரும் விநியோகத்தருமான INSEE சீமெந்து ஸ்ரீ லங்கா, தேசத்தின் நிர்மாணத்துறையின் வளர்ச்சிக்காக தனது புத்தாக்கமான தீர்வுகளை அண்மையில் வெளிப்படுத்தியிருந்தது.

நாளைய கட்டட நிர்மாணத்துறையின்  வளர்ச்சிக்காக இன்றைய தரங்களை நிர்ணயிப்பதில் தொடர்ச்சியாக செயலாற்றும் INSEE சீமெந்து நிறுவனம், புத்தாக்கத்தை மையப்படுத்தி துறையின் புத்தாக்கல் நடவடிக்கைகளுக்காய் செயலாற்றி வருகின்றது. இதன் பொருட்டு நிறுவனமானது தனது துணை நிறுவனமும், நிலைபேற்று கழிவு முகாமைத்துவத்தில் முன்னணியாய் திகழும் நுஉழஉலஉடந நிறுவன செயற்பாடுகளில் மற்றும் தனது நவீன உற்பத்தி சாதனங்கள் மற்றும் கருவிகளை மூலம் அளப்பரிய சேவையை வழங்கிவரும் புதிய 'i2i  கூட்டாண்மை மைய' நடவடிக்கைகளில் முதலீடு செய்துள்ளது. இதனூடாக நாட்டின் கட்டட நிர்மாணத்துறையை மேம்படுத்துவதிலும் இலங்கையர்களுக்கு உறுதியான மற்றும் நிலைபேறான எதிர்காலத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளிலும் பங்களிப்பு வழங்குகின்றது.

INSEE சீமெந்தின் புத்தாக்கம் மற்றும் தயாரிப்பு அபிவிருத்திக்கான தலைமை அதிகாரி மூஸா பால்பாகியுடன் இதுபற்றி கலந்துரையாடுகையில், “தென்கிழக்காசியாவிலும் சர்வதேசத்திலும் நிர்மாணத்துறை மற்றும் சீமெந்தில் தலைமைத்துவம் வகிக்கத்தக்க நாடான இலங்கையை கட்டியெழுப்பும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம். இதற்காய் துறையை சார்ந்த சகல பங்காளர்கள், ஆய்வுகூடங்கள், சான்றளிக்கும் அமைப்புகள், சூழல் அதிகார அமைப்புகள் போன்ற பல்வேறு தரப்பினருடன் கைகோர்த்து செயலாற்றுவது தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். எதிர்காலத்துக்கான நிர்மாணத்துறையை கட்டியெழுப்பும் நம்பிக்கை வாய்ந்த பங்காளராக நாம் திகழ்கின்றோம்” என்றார்.

கூட்டாண்மை பொறுப்புணர்வுடன் தமது தொழினுட்பம், அறிவை பங்காளர்களுடன் பகிர்ந்து கொள்தில் INSEE சீமெந்து உறுதியான நம்பிக்கையை கொண்டுள்ளது. தொடர்ச்சியான உயர்தரத்தை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவதுடன், பங்காளர்களுடன் நெருக்கமாக செயலாற்றி, நிர்மாணத்துறையை மாற்றியமைக்கும் புத்தாக்க தீர்வுகளை கட்டியெழுப்புவதில் INSEE சீமெந்து நிறுவனம் முக்கிய பங்களிப்பு வழங்குகின்றது. குறுகிய கால தேவை கருதி தயாரிப்புகளை வழங்குவதில மட்டும்; கவனம் செலுத்தாமல், நாளைய நிர்மாணத்துறையை வடிவமைக்கும் நிலைபேறான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் INSEE சீமெந்து நிறுவனம் கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.

தமது நீண்ட கால முதலீடுகளினூடாக INSEE சீமெந்து, உற்பத்தித் திறன், விநியோகத் தொடர்பு, பிரசன்னம் ஆகியவற்றை வெற்றிகரமாக மேம்படுத்தியுள்ளது. நாடு முழுவதிலுமுள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளை துரித விநியோக சேவைகள் மூலம் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. வேகமான விநியோகம் மற்றும் தொடர்ச்சியான தரம் ஆகியன பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் காரணிகளாகும். அந்த வகையில், குறித்த நிறுவனமாகது தனது 800,000 க்கும் அதிகமான விநியோகத்தர்கள் மற்றும் விநியோகமையங்;கள் மற்றும் INSEE இன் புதிய எக்ஸ்பிரஸ் லொஜிஸ்டிக்ஸ் நிலையத்தினூடாகவும் சீமெந்து மற்றும் கொங்கிறீற் தீர்வுகளை நாடு முழுவதிலும வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.  

தமது சொத்து புத்தாக்கல் நடவடிக்கைகளினூடாய், INSEE சீமெந்து தொடர்ச்சியாக 'நாளைய சமுதாயாத்தின் வாழ்க்கைக்கான இன்றைய நிர்மாணம்' எனும் தொனிப்பொருளில் தேசத்துக்கும் நாட்டு மக்களுக்கும் அனுகூலமளிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்த வண்ணமுள்ளது. புத்தாக்கத்தில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு துறைசார் பங்காளர்களை நிறுவனம் ஊக்குவிப்பதுடன், இது துறைக்கு வெகுமதியளிப்பதாக அமைந்திருக்கும்.

நிறுவனத்தின் தயாரிப்பு தரம் மற்றும் புத்தாக்கல் பிரிவின் தலைவர் மூஸா பால்பாகி இது பற்றி கருத்து தெரிவிக்கையில், “நாம் பேலியகொடயில் அண்மையில் நிறுவிய i2i collaboration spacel மையத்தின் ஊடாக இலங்கையின் கட்டட நிர்மாணத்துறையை மேம்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றோம். இன்றைய திறந்த புத்தாக்கமான சூழலில், தனித்து இயங்க முடியாது. எமது செயன்முறைகள் முதல் தயாரிப்பு இலாகாக்கள் வரை நாம் புத்தாக்கல் நடவடிக்கைகளில் தினந்தோறும் செயலாற்றுகின்றோம். உதாரணமாக: 50% க்கும் அதிகமான எமது தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை எடுத்துக்கொண்டால், அவை கூடியது 5 வருட காலப்பகுதிக்குள் உருவாக்கப்பட்டவையாகவே உள்ளன. நிறுவனமானது தொடர்ச்சியான முதலீடுகளை மேற்கொண்டுவருகின்றது. எமது புதிய innovation to industry (i2i) collaboration பகுதியில் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த மையத்தில் எமது துறைசார் பங்காளர்களுடன் இணைந்து சிறந்த சிந்தனைகளை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது” என்றார்.

நாட்டில் புத்தாக்கத்தை முன்னெடுப்பதற்கு சரியான சூழலை கட்டியெழுப்புவது முக்கியமானது என்பது INSEE சீமெந்தை பொறுத்தமட்டில் முக்கியமானதாக அமைந்துள்ளது. இதைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் சரியான சூழல் மற்றும் சிறப்புத்தேர்ச்சிப் பெற்ற ஊழியர்களை கொண்டிருப்பது நிறுவனத்தின் சிறப்பம்சமாய் காணப்படுகின்றது.

நம் நாட்டின் கட்டட நிர்மாணச்சூழலை கட்டியெழுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, சில புகழ்பெற்ற சர்வதேச பல்கலைக்கழகங்களில் காணப்படும் நிலைகளுக்கு ஒப்பான தரமான பொறியியல் கல்வி சார்ந்த யுக்திகளை, இலங்கைப்பொறியியல் பல்கலைக்கழகங்களலும் அறிமுகப்படுத்தி நாளை சிறந்த பொறியியலாளகளை வெளிக்கொணரும் அளப்பரிய சேவையில் ஐNளுநுநு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இளைஞர்கின் யுகம் தொடர்ச்சியாக மாற்றமடைந்து வரும் வேகத்தை உணர்ந்து, INSEE சீமெந்தின் புதிய i2i collaboration மையத்தின் ஊடாக, டிஜிட்டல் மயமாக்கபட்ட சேவைகள வழங்கிவருகின்றது.

பால்பாகி இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் எமக்கு பிரகாசமான எதிர்காலத்தை கட்டியெழுப்பமுடியும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். சமூகத்துக்கு சிறந்த போக்குவரத்து, நீர் வடிகாலமைப்பு மற்றும் நிர்மாண உட்கட்டமைப்பு போன்றவற்றினூடாக பாரிய மேம்படுத்தலை ஏற்படுத்தும் வாய்ப்புகளை வழங்கி இலங்கையை நேர்த்தியான வழியில் வளர்ச்சி காணச்செய்வது எமது முக்கிய கடப்பாடுகளுள் ஒன்றாகும்”  என்றார்.

பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தினூடாக INSEE சீமெந்து தொடர்ச்சியாக சூழலுக்கு நட்பான தயாரிப்புகளை ஊக்குவித்து வருகின்றது. நிலைபேறான உறுதியான பிளென்டட் சீமெந்து பயன்படுத்தலை அதிகப்படுத்தி சூழலை மாசுறுதலை குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வருடாந்தம் சுமார் 400,000 டொன்கள் அளவான காபனீரொட்சைட்டை குறைப்பதில்; INSEE தயாரிப்புகளின் புத்தாக்கல் நடவடிக்கைகள் முக்கிங பங்காற்றியுள்ளது. INSEE சீமெந்து தயாரிப்புகள் SLSI நியமங்களுக்கு பொருத்தமான உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகளை வழங்கும், புத்தாக்கத்தை ஊக்குவித்து வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .