2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

INSEE சீமெந்தின் போதைப்பொருள், மதுபானங்கள் ஒழிப்பு நடவடிக்கைகள்

Editorial   / 2017 ஒக்டோபர் 05 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

INSEE சீமெந்து, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை மற்றும் இலங்கை பொலிஸ் உடன் இணைந்து, போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை புத்தளம், அருவக்காலு மற்றும் காலி ஆகிய பிரதேசதங்களைச் சேர்ந்த 23 பாடசாலைகளில் முன்னெடுத்திருந்தது. இந்த நடவடிக்கையினூடாக 14 - 18 வயதுக்குட்பட்ட 1,700 பாடசாலை மாணவர்கள் அனுகூலம் பெற்றிருந்தனர். குறித்தப் பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்காக முன்னெடுக்கப்பட்டிருந்த ஒரு நாள் விழிப்பூட்டல் மற்றும் வாழ்க்கைக்கு வளமூட்டும் வகையிலமைந்த செயற்பாடுகளில் குறித்த பிரதேசங்களின் பொலிஸ், மாவட்ட செயலகம் மற்றும் மாநகர சபை ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

பங்குபற்றிய மாணவர்களை குறித்த தலைப்பிலமைந்த நிகழ்ச்சியில் மும்முரமாய் ஈடுபடுத்தும் வகையில் தியேட்டர் அடிப்படையில் செயலமர்வு அமைந்திருந்தது. பிரயோகக்கலை முறையில் குறித்த செயற்றிட்டத்தின் தொடர்பாடல்கள் புத்தாக்கமான முறையில் அமைந்திருந்தது. மாணவர்களுக்கு பரீட்சியமான பாரம்பரிய விரிவுரை அம்சங்களுக்கு அப்பால் சென்று அவர்களுக்கு அறிவூட்டும் வகையில் இந்த விளக்கம் அமைந்திருந்தது. மாணவர்களுக்கு ஏற்ற வகையில் பாரதூரமான போதைப்பொருட்கள் பாவனை தவிர்ப்பு குறித்த விளக்கம், போதைப்பொருள் பயன்படுத்தாமை, மதுபானங்கள் மற்றும் புகையிலை போன்றவற்றின் பாவனை தவிர்ப்பு ஆகியவற்றினால் ஆரோக்கியமான வாழ்க்கைப்பாணியை முன்னெடுப்பது தொடர்பான விளக்கங்களுடன் இந்த நிகழ்வு மிக விறுவிறுப்பானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமைந்திருந்தது.

INSEE சீமெந்து நிறுவனத்தின் நிலைபேண்தகைமை மற்றும் கூட்டாண்மை பொறுப்புணர்வு செயற்பாடுகளின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்திருந்ததுடன், நாட்டில் போதைப்பொருட்களுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில், பொறுப்பான முறையில் எதிர்கால சந்ததியை கட்டியெழுப்புவதுடன், இலகுவில் பாதிப்புறக்கூடிய நிலையிலுள்ள மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனையால் ஏற்படும் அபாயத்தன்மை பற்றி விளக்கமளித்திருந்தது.

INSEE சீமெந்து நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நந்தன ஏக்கநாயக்க இது பற்றி கருத்துத் தெரிவிக்கையில், “சமூகப்பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில், நாம் எமது சமூகத்துக்கு வலுவூட்டும் இது போன்ற பங்களிப்பை  வழங்குவதை முன்னிட்டு பெருமையடைகின்றோம். இளைஞர்களை ஆரோக்கியமான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையை கட்டியெழுப்ப இது மூலம் ஊக்குவிக்கின்றோம். அந்த வகையில் குறித்த செயற்பாடு வெற்றிகரமானதாக அமைந்துள்ளதுடன், நமது நாட்டிற்கும் பெறுமதி சேர்க்கும் ஒரு நிகழ்வாய் அமைகின்றது. இதுபோன்ற சமூக ஈடுபாட்டு நடவடிக்கைகளினூடாக, இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுபபதில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவோம்” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .