2024 மார்ச் 28, வியாழக்கிழமை

IQA விருதை வெற்றி பெறும் AIA

Editorial   / 2018 மே 31 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிசிறந்த ஐந்து நிறுவனங்களில் ஒன்றாக, AIA இன்ஷுரன்ஸை LIMRA தெரிந்தெடுத்துள்ளது. ‘ஆலோசகர்களுக்கான சர்வதேசத் தர விருதை, (IQA) உலகில் வளர்ச்சி எய்தியதுக்காக வழங்கிக் கௌரவித்துள்ளது. இப்புதிய விருதானது, கடந்த இரண்டு வருடங்களில் IQA இற்காகத் தகுதிபெற்றவர்களில் இருந்து, 20 சதவீதத்துக்கும் அதிகமான, வருடா வருடம் மிகவும் உயர்ந்தபட்சமான வளர்ச்சி வீதத்தை எய்திய நிறுவனங்களையே கௌரவிக்கின்றது.   

IQA ஆனது அதிசிறந்த வாடிக்கையாளர் சேவையுடன், நிலைபேறான அடிப்படையில், தரமான வியாபாரத்தை மேலும் ஊக்குவிக்கும் முகவர் நிறுவனங்களின் மிகச்சிறந்த செயற்திறனை அடையாளப்படுத்திக் கௌரவிப்பதற்காகவே 196ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. AIA யின் அதிசிறந்த நிதியியல் ஆலோசகர்களின் உயர் திறமைக்கான சான்றாக, இவ்விருதை வெற்றி பெறும் இலங்கையின் ஒரேயொரு முதலாவது நிறுவனமாக AIA உள்ளது.   

AIA இன் பிரதான நிறைவேற்று அதிகாரி பங்கச் பெனர்ஜி, இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், “உண்மையில் இவ்வங்கிகாரம் எங்களுடைய வெல்த் பிளேனர்களின் அதிசிறந்த செயற்திறனையே பறைசாற்றுகின்றது. எங்களுடைய வெல்த் பிளேனர்கள் தரமிக்க வணிகத்தை ஊக்குவிப்பதிலும், புதிய வர்த்தகத்தைக் கட்டியெழுப்புவதிலும் தொடர்ச்சியாகச் செயற்திறன் மிக்கவர்களாக இருப்பதோடு, வாடிக்கையாளர் சேவையை வழங்குவதில், அவர்களைப் பெருமைப்படவும் வைக்கின்றனர். இந்த விருதைப் பெறுவதற்கு, எங்களுடைய தகுதியாளர்கள் இரு தொடர்ச்சியான வருடங்களுக்காக மிகவும் உன்னிப்பான குறைந்தபட்சளவு புதிய வாடிக்கையாளர் கையகப்படுத்தல் தரநிலைகளை எய்தியிருந்ததுடன், இவ்வாடிக்கையாளர்களின் மிகவும் கவர்ச்சிகரமான நிலைபேறு வீதமொன்றையும் பராமரித்திருந்தனர்” எனத் தெரிவித்தார்.  

AIA இன் பிரதிப் பிரதான நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதான முகவர் நிறுவன உத்தியோகத்தர் உபுல் விஜேசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் இந்த விருதைப் பெறும் ஒரேயொரு காப்புறுதி வழங்குநராகவே நாங்கள் கௌரவிக்கப்பட்டுள்ளோம். நாங்கள் தொடர்ச்சியாகக் கடினமாக உழைப்பதோடு, இம்மதிப்பு மிக்க அங்கிகாரத்தின் பெறுமதியைத் தக்கவைப்பதற்காக மேலும் சிறப்பாகச் செயற்படுவோம். 

மேலும் இந்த விருதானது, தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கும் இலங்கை வாடிக்கையாளர்களின் மனநிலையை நன்றாகப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு வழங்க வேண்டிய முக்கியத்துவத்தை வழங்கியதையே பிரதிபலிக்கின்றது. நாங்கள் அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்குமான வலிதானதொரு சான்றாக இவ்விருது உள்ளது.  வாடிக்கையாளரை மையப்படுத்திய மிகவும் உயர்தரமான சேவைக்கே நாங்கள் முன்னுரிமை அளிப்பதோடு, அதன்படியே தொடர்ச்சியாகச் செயற்படுவோம்” எனத் தெரிவித்தார்.   

LIMRA இன் சிரேஷ்ட உபதலைவரும், நிர்வாகப் பணிப்பாளருமான அயன் ஜே வாட்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், ‘AIA இன்ஷுரன்ஸ், தனது முகவர்கள், புதிய வாடிக்கையாளர் கையகப்படுத்தலின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டுள்ளதன் மூலமாகத் தனது பெறுமதியை வெளிப்படுத்தியிருக்கிறது. மேலும், உயர் நிலைபேறான வளர்ச்சி வீதமானது எந்தவோர் ஐயமுமின்றி, வணிகத்தின் வெற்றிக்கு மிகவும் முக்கியமானதொரு காரணியாகும். இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் காப்புறுதித் துறையின் தொடர்ச்சியான வெற்றிக்கும், மற்றும் செழுமைக்கும், AIA இனை முன்னுதாரணமாகக் கொண்டு பின்பற்றுமாறே நாங்கள் மற்றைய நிறுவனங்களையும் ஊக்குவிக்கின்றோம்” எனத் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X